4 வருட OS அப்டேட், 50MP செல்ஃபி கேமரா... பீரிமியம் அம்சங்களுடன் களமிறங்கியது விவோ V60 5G!

விவோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான விவோ V60 5G-ஐ இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தப் போன், அதன் லேட்டஸ்ட் அம்சங்கள், பிரீமியம் டிசைன் காரணமாக ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டியாளராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான விவோ V60 5G-ஐ இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தப் போன், அதன் லேட்டஸ்ட் அம்சங்கள், பிரீமியம் டிசைன் காரணமாக ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டியாளராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Vivo V60 5G (1)

4 வருட OS அப்டேட், 50MP செல்ஃபி கேமரா... பீரிமியம் அம்சங்களுடன் களமிறங்கியது விவோ V60 5G!

விவோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான விவோ V60 5G-ஐ இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தப் போன், அதன் லேட்டஸ்ட் அம்சங்கள், பிரீமியம் டிசைன் காரணமாக ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டியாளராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஃபோனுக்கு 4 வருட OS மேம்படுத்தல்கள் மற்றும் 6 வருட பாதுகாப்பு புதுப்பிப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இது பெரிய சிறப்பம்சமாகும்.

Advertisment

இந்த ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் செயலியின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இதில், 6500mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகியவை உள்ளன. 6.77 இன்ச் அளவு கொண்ட 1.5K ரெசல்யூஷன் குவாட் வளைந்த AMOLED டிஸ்ப்ளே. இதில் 120Hz புதுப்பிப்பு விகிதம் மற்றும் அதிகபட்சமாக 5000 nits பிரகாசமும் உள்ளது. 4nm அடிப்படையிலான Snapdragon 7 Gen 4 Octa-core செயலி. 16GB வரை LPDDR4x RAM, 512GB வரை UFS 2.2 சேமிப்பு வசதி. ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான FunTouch OS 15-ல் இயங்குகிறது.

பின்புறம் 50 மெகாபிக்சல் சோனி IMX766 முதன்மை சென்சார், 50 மெகாபிக்சல் சோனி IMX882 டெலிஃபோட்டோ லென்ஸ், மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பு. முன்புறம் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, இது 4K வீடியோ பதிவை ஆதரிக்கிறது. 6,500mAh பேட்டரி மற்றும் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி.

விவோ V60 5G, பல மேம்பட்ட AI அம்சங்களுடன் வருகிறது. அவற்றில் சில, AI ஸ்மார்ட் கால் அசிஸ்டென்ட், AI இமேஜ் எக்ஸ்பாண்டர், AI பிளாக் ஸ்பேம் கால் டூல் மற்றும் AI கேப்ஷன் ஆகியவை அடங்கும். இந்த போன் 4 வெவ்வேறு சேமிப்பு வகைகளில் கிடைக்கிறது:

8GB RAM / 128GB சேமிப்பு - ரூ.36,999

8GB RAM / 256GB சேமிப்பு - ரூ.38,999

12GB RAM / 256GB சேமிப்பு - ரூ.40,999

16GB RAM / 512GB சேமிப்பு - ரூ.45,999

Advertisment
Advertisements

இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதன் விற்பனை ஆக.19 முதல் விவோவின் அதிகாரப்பூர்வ இணையதளம், தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை கடைகள், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய தளங்களில் தொடங்கும். ரூ.35,000 முதல் ரூ.45,000 வரையிலான விலை வரம்பில், V60 5G ஆனது Realme 15 Pro 5G, Google Pixel 8A, OnePlus 13R 5G, iQOO Neo 10, Honor 200 Pro 5G போன்ற மற்ற ஸ்மார்ட்போன்களுடன் நேரடியாக போட்டியிடும்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: