காதலர் தினத்தன்று கண்களை கவரும் விதமாக ரெட் நிறத்தில் வெளிவருகிறது விவோ நிறுவனத்தின் வி7 ப்ளஸ் மாடல்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று காதலர்கள் தங்களின் மனம் கவர்ந்தவர்களுக்கு பரிசுப் பொருட்களை வாங்கி தருவதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக ரெட் நிறத்திலான ஆடைகள் அணிவது, ரோஜாக்களை வாங்குவது என காதலர்களுக்கும், ரெட் நிறத்திற்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையது போலவே பெரும்பாலான படங்கள், கதைகளில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
இந்த தொடர்பு தற்போது தொழில்நுட்பத்தையும் விட்டுவைக்க வில்லை. காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பிடித்த ரெட் நிறத்தில், விவோ நிறுவனம் வி7 ப்ள்ஸ் மாடலில் புதிய வடிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விளம்பரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த ஆண்டு அறிமுகப்படுக்த்தப்பட்ட வி7 ப்ள்ஸ் மாடல் கோல்ட், சில்வர், கருப்பு நிறங்களில் வெளியாகின. அதன் பின்பு, தற்போது இந்த ஃபோன் ரெட் நிறத்தில் வெளியாகவுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/02/2-300x168.jpg)
பிரபல வடிவமைப்பாளரான மனிஷ் மல்ஹோத்ராவுடன் இணைந்து இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைலின் பின்புறம் அனைவரையும் கவரும் வகையில் பளப்பளப்பாக தோன்றக் கூடிய மெட்டலில் ரெட் நிறத்தில் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் காதல் குறியீடாக கூறப்படும் ஹார்டின் குறியீடும் அதில் இடம்பெற்றுள்ளது. இதன் விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/02/3-300x197.png)
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையிலும் இது விற்பனை செய்யப்படுகிறது. 24 எம்பி மெகா பிக்சல் கேமரா, 18:9 அஸ்பட் ரேட்ஷியோ, 5.99 ஹெச்டி டிஸ்ப்ளே, 1440x720 பிக்சல், ஸ்னேப்ட்ராகன் 450 சிப்செட், 3225 மெகா பேட்டரி கொண்ட இந்த விவோ வி7 ப்ள்ஸ் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ஸ்பேஸ் கொண்டது.