/tamil-ie/media/media_files/uploads/2018/03/award-1-3.jpg)
மொபைல் பிரியர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் விவோ நிறுவனத்தின் வி9 ஸ்மார்ட்ஃபோன் வரும் மார்ச் 27 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது.
டூயல் ரியர் கேமரா மற்றும் பெஸல்லெஸ் டிஸ்பிளே அம்சங்களுடன் வெளிவரும் விவோ வி9 ஐபோன் எக்ஸ் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐபோன் எக்ஸ் பின்புற கேமராவைப் போன்றே விவோ வி9 ஃபோனின் பின்புற கேமராவும் அமைந்திருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி, விவோ வி9 ஸ்மார்ஃபோனில் இடம்பெற்றிருப்பதாகவும் இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திலும் செயல்படக் கூடியது. அதிகம் எதிர்பார்த்த கைரேகை ஸ்கேனர், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் என அனைத்து சிறப்மசங்களும் இந்த ஸ்மார்ஃபோனில் சிறந்த தரத்துடன் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் இதன் விலை, ரூ.25,000 வரை இருக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ஃபோனில் சிறந்த செயல்பாடுகள் வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு விவோ வி9 முதல் தேர்வாக இருக்கிறது.
சிறப்பமசங்கள்;
* 5.7-இன்ச் ஐபிஎஸ் பெஸல்லெஸ் டிஸ்பிளே
*1440 X 720 பிக்சல்
* 18:9 திரை விகிதம்
* 24மெகாபிக்சல் செல்பீ கேமரா
* 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.