33 நாட்கள் நீடிக்கும் பேட்டரி, சூரிய வெளிச்சத்திலும் பளிச்... விவோவின் ஸ்மார்ட்வாட்ச் புரட்சி!

விவோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆன வாட்ச் GT 2-ஐ சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சதுர வடிவ டிஸ்ப்ளேவுடன் ஆப்பிள் வாட்ச் போலவே காட்சியளிக்கிறது. இதில், ஒரே நேரத்தில் ஒரு ஐபோன், ஒரு விவோ ஸ்மார்ட்போனுடன் இணைக்க முடியும்

விவோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆன வாட்ச் GT 2-ஐ சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சதுர வடிவ டிஸ்ப்ளேவுடன் ஆப்பிள் வாட்ச் போலவே காட்சியளிக்கிறது. இதில், ஒரே நேரத்தில் ஒரு ஐபோன், ஒரு விவோ ஸ்மார்ட்போனுடன் இணைக்க முடியும்

author-image
Meenakshi Sundaram S
New Update
Vivo Watch GT 2

33 நாட்கள் நீடிக்கும் பேட்டரி, சூரிய வெளிச்சத்திலும் பளிச்... விவோவின் ஸ்மார்ட்வாட்ச் புரட்சி!

விவோ நிறுவனம் அதன் ஸ்மார்ட்வாட்ச் சீரிஸில் புதிய வாட்ச் அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் விவோ வாட்ச் ஜிடி 2 (Vivo Watch GT 2). சீனாவில் இன்று எக்ஸ்-300 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பேட் 5e டேப்லெட்டுடன் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த வசந்த காலத்தில் வெளியான வாட்ச் 5-ன் அப்டேட்டாக வரும் வாட்ச் ஜிடி 2, அதன் சதுர வடிவ டிஸ்ப்ளேவை அப்படியே தக்கவைத்துள்ளது. முதலில் பார்க்கும்போது இது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11-ஐப் (Apple Watch Series 11) போல அச்சு அசலாக ஒத்திருக்கிறது. இந்தத் தோற்ற ஒற்றுமைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, இந்த வாட்சில் சுவாரஸ்யமான இணைப்பு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆம், வாட்ச் ஜிடி 2-ஐ ஒரே நேரத்தில் ஒரு ஐபோன், ஒரு விவோ ஸ்மார்ட்போனுடன் இணைக்க முடியும்! 2 போன்களில் இருந்து வரும் அறிவிப்புகளையும் ஒரே நேரத்தில் உங்கள் வாட்ச்சில் பார்த்துக் கொள்ளலாம். இந்தச் செயல்பாட்டைத் திறக்க சீன ஆப்பிள் அக்கவுண்ட் தேவை என்றாலும், இது அரிய மற்றும் பயனுள்ள அம்சமாகும்.

இந்த வாட்ச், அலுமினிய உறையில் பொருத்தப்பட்ட 2.07-இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் ரெசல்யூஷன் 514×432 பிக்சல்கள், புதுப்பிப்பு வீதம் 60 Hz. சூரிய ஒளியிலும் தகவல்கள் பளிச்சென்று தெரிய, இது 2,400 நிட்ஸ் வரை பிரகாசத்தை அள்ளி வீசும். விவோ, இந்த வாட்சில் 695 mAh பேட்டரி உள்ளதாகக் கூறுகிறது. ஆனால், இ-சிம் இணைப்பு கொண்ட பதிப்பில் இது 595 mAh ஆகக் குறைகிறது. இ-சிம் பதிப்பை விட ப்ளூடூத் பதிப்புதான் பேட்டரி ஆயுளில் அதிக நாட்கள் தாக்குப்பிடிக்கிறது. பவர்-சேவிங் பயன்முறையில் (power-saving mode) 33 நாட்கள், சாதாரணப் பயன்பாட்டில் 17 நாட்கள், எப்போதும் இயங்கும் டிஸ்ப்ளே (AoD) செயல்படுத்தப்பட்டால் 14 நாட்கள், இ-சிம் (eSIM) மாடலில் எல்.டி.இ மோடம் (LTE modem) பயன்பாட்டில் இருக்கும்போது 8 நாட்கள் பேட்டரி ஆயுளை மட்டுமே அடையும்.

2 வகைகளும் மைக்ரோஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளன. எனவே, இணைக்கப்பட்ட போனை எடுக்காமலேயே நீங்க  கால்ஸ் கையாளலாம். அத்துடன், தூக்க கண்காணிப்பு, மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு (sleep and cycle tracking) வசதிகளையும் இது ஆதரிக்கிறது.

Advertisment
Advertisements

ப்ளூடூத் மாடல்: CNY 499 (தோராயமாக ரூ.5,800), இ-சிம் மாடல்: CNY 699 (தோராயமாக ரூ.8,100)-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விவோ வாட்ச் ஜிடி 2, கவர்ச்சிகரமான விலையில் (சுமார் $70) கிடைக்கிறது. ஆனால், X300 சீரிஸ் போலல்லாமல், இந்த வாட்ச் உலகளவில் எப்போது கிடைக்கும் என்பது குறித்து விவோ இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: