Advertisment

மிகுந்த எதிர்பார்ப்பு; இந்தியாவில் ஜன.4-ல் விவோ X100 சீரிஸ் போன்கள் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள் என்ன?

விவோ X100 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் விவோ X100, விவோ X100 ப்ரோ போன்கள் இந்தியாவில் ஜனவரி 4-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Vivo X100.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விவோ தனது X100 சீரிஸ் ஸ்மார்ட் போன்களை ஜனவரி 4-ம் தேதி  இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. இரண்டு ஸ்மார்ட் போன்கள் - Vivo X100 மற்றும் Vivo X100 Pro போன்களை தேதி அறிமுகம் செய்கிறது. இந்த போன்கள்  நவம்பர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, 

Advertisment

விவோ X100, விவோ X100 ப்ரோ சிறப்பம்சங்கள்

விவோ X100, விவோ X100 ப்ரோ ஸ்மார்ட் போன்கள் இரண்டும் MediaTek Dimensity 9300  ப்ராசஸர் மூலம் 4-நானோமீட்டர் செயல்பாட்டின் அடிப்படையில் இயங்குகிறது. 6.78-இன்ச் curved டிஸ்ப்ளே கொண்டுள்ளது.  120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 2,160Hz PWM டிம்மிங் மற்றும் 3000  பீக் நிட்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

இரண்டு போன்களும் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வந்தாலும், X100 ஆனது 50MP மெயின் சென்சார் உடன் Sony IMX VCS சென்சார் மற்றும் 64MP டெலிஃபோட்டோ கேமராவுடன் Zeiss லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் வருகிறது. 

அதே நேரம் விவோ X100 ப்ரோ IMX989 லென்ஸுடன் 50MP ப்ரைமரி சென்சார் மற்றும் 4.3x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 50MP Zeiss லென்ஸைக் கொண்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஒரே 50MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவுடன் வருகின்றன.

Vivo X100 ஆனது 5,000 mAh பேட்டரியுடன் வருகிறது, 100W பாஸ்ட் சார்ஜிங்  வசதி கொண்டுள்ளது.  X100 Pro ஆனது 

120W வயர்டு பாஸ்ட் சார்ஜிங்  வசதி. 5,400 mAh பேட்டரி கொண்டுள்ளது. 

விலை  

TheTechOutlook-ன் அறிக்கையின்படி, Vivo X100 ஸ்மார்ட் போன் 12 ஜிபி ரேம்/ 256 ஜிபி ஸ்டோரேஜ் போன் இந்தியாவில் ரூ.63,999-க்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 16 ஜிபி ரேம்/256 ஜிபி ஸ்டோரேஜ் போன் ரூ.63,999-க்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ விலை விவரங்கள் போன் அறிமுக தேதியில் வெளியிடப்படும்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment