விவோ புதிதாக X100 மற்றும் X100 ப்ரோ என்ற பெயரில் 2 புதிய ஸ்மார்ட் போன்களை வரும் டிசம்பர் 14-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போனாகவும், பல்வேறு வசதிகளை கொண்டதாகவும் உள்ளது.
விவோ X100, X100 ப்ரோ சிறப்பம்சங்கள்
விவோ X100, X100 ப்ரோ இரண்டும் மீடியாடெக்-ன் முதன்மையான 4nm Dimensity 9300 சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன. ட்ரிபிள் கேமரா வசதி, 50 மெகாபிக்சல் சோனி IMX920 VCS சென்சார், 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவை கொண்டுள்ளன.
மறுபுறம், ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன் ஐ.எம்.எக்ஸ் 989 1 இன்ச் வகை சென்சார், 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் ஆகியவைகள் கொண்டுள்ளன.
2 போன்களும் 1TB ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது. மேலும் X100 மாடல் 120W வாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது. X100 Pro ஆனது 100W சார்ஜிங்-ல் 5000mAh பேட்டரியைப் பெறுகிறது.
மேலும், 2 மாடல் போன்களும் 6.78-இன்ச் OLED பேனலுடன் வருகின்றன, 20Hz புதுப்பிப்பு வீதத்தையும் 3,000 நிட்களின் அதிகபட்ச brightness-ம் ஆதரிக்கிறது. அதோடு டஸ்ட் வாட்டர் ரெசிஸ்டன்க்கு IP68 ரேட்டிங் கொண்டுள்ளது. எனினும் இந்த ஸ்மார்ட் போன் உலக அளவில் டிச.14-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டாலும், இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும் எனக் கூறப்படவில்லை.
Vivo X100 ஆனது 3,999 யுவான் (தோராயமாக ரூ. 45,600), X100 Pro தொடரின் விலை 4,999 யுவான் (சுமார் ரூ. 57,000) ஆக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இன்னும் விலை பட்டியல் வெளியிடப்பட வில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“