புது போன் வந்தாச்சு… பட்ஜெட் ‘வெயிட்’தான்… வசதிகளைப் பாருங்க!

Vivo X50 Pro : பின்பக்க கேமரா 20x digital zoom, four-axis OIS, EIS ஆகிய அம்சங்களுடன் வருகிறது. முன்பக்கத்தில் 32MP sensor உள்ளது.

By: July 16, 2020, 8:10:15 AM

VIVO X50, VIVO X50 PRO News In Tamil: Vivo தனது X50 தொடர் (series) ஸ்மார்ட் கைபேசிகளை Vivo X50 மற்றும் Vivo X50 Pro உள்ளிட்டவற்றை ஜூலை 16 ஆம் தேதி 12 மணி (IST) முதல் அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. இந்த இரண்டு கைபேசி மாடல்களும் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன, மேலும் இவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது அதே போன்ற விவரக்குறிப்புகள் (specifications) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில், 8GB RAM/128GB சேமிப்பு (storage) திறன் கொண்ட Vivo X50 கைபேசியின் விலை Yuan 2,498 (தோராயமாக ரூபாய் 37,000/-) இருக்கும். மேலும் 8GB RAM/256GB சேமிப்பு திறன் கொண்ட கைபேசியின் விலை Yuan 3,898 (தோராயாமாக ரூபாய் 41,000/- )வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் Vivo X50 Pro மாடல் கைபேசி – 8GB RAM/128GB சேமிப்பு திறன் கொண்ட கைபேசிய்ன் விலை Yuan 4,298 (தோராயமாக ரூபாய் 45,500/-) மற்றும் Yuan 4,698 (தோராயமாக ரூபாய் 49,500/-) வரும். எனினும் நிறுவனம் இந்த கைபேசிகளுக்கு இந்தியாவில் குறைந்த விலை புள்ளிகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIVO X50, VIVO X50 PRO Specifications: Vivo X50 விவரக்குறிப்பு

வரவிருக்கும் இந்த கைபேசிகள் குறித்து தெரிந்த தகவல்களைப் பார்ப்போம்.

Vivo X50 விவரக்குறிப்பு (specifications)

ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அதே இரண்டு கைபேசி மாடல்களையும், இந்தியாவில் அப்படியே ஜூலை 16 முதல் அறிமுகம் செய்ய உள்ளது. Vivo X50 கைபேசியில் 2,376×1080 pixels resolution உடன்கூடிய 6.56-inch full HD+ AMOLED டிஸ்ப்ளே, Qualcomm Snapdragon 765G processor உடன் இணைந்த Adreno 620 GPU, 8GB RAM மற்றும் 256GB வரை விரிவாக்கம் செய்யக்கூடிய வகையிலான உட்புற சேமிப்பு (internal storage) வசதி ஆகியவை உள்ளது. இந்த கைபேசி Google’ன் Android 10 operating system ல் நிறுவனத்தின் சொந்த Funtouch OS 10.5 skin ல் இயங்குகிறது. மேலும் இந்த கைபேசியில் 4,200mAh பேட்டரி மற்றும் 33W fast charging வசதியுள்ளது.

கேமராவை பொருத்தவரை Vivo X50 கைபேசியின் பின்பக்கத்தில் 48MP முதன்மை sensor உடன் ஜோடியாக 13MP portrait கேமரா, ஒரு 8MP wide-angle lens மற்றும் ஒரு 5MP macro lens கொண்ட quad-camera setup உள்ளது. பின்பக்க கேமரா 20x digital zoom, four-axis OIS, EIS ஆகிய அம்சங்களுடன் வருகிறது. மேலும் செல்பி எடுப்பதற்காக முன்பக்கத்தில் 32MP sensor உள்ளது.

Vivo X50 Pro specifications

Vivo X50 Pro கைபேசியிலும் HDR 10+ உதவியுடன் கூடிய 6.56-inch full HD+ curved AMOLED டிஸ்ப்ளே, Qualcomm Snapdragon 765G processor உடன் இணைந்து 8GB RAM மற்றும் 256GB வரை விரிவாக்கம் செய்யத்தக்க சேமிப்பு வசதியும் உள்ளது. மேலும் Google’ன் Android 10 operating system ல் நிறுவனத்தின் சொந்த Funtouch OS 10.5 skin ல் இயங்குகிறது. மேலும் இந்த கைபேசியில் 4,315mAh பேட்டரி மற்றும் 33W fast charging வசதியுள்ளது. கையில் வைத்து வீடியோ எடுக்கும் போது ஏற்படும் குலுக்கத்தைக் குறைப்பதற்காக X50 Pro மாடல் கைபேசியில் gimbal கேமரா முறை (camera system) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வீடியோவை தெளிவாக பதிவு செய்வதற்காக motion-deblur algorithm, customised sensors, மற்றும் continuous focus tracking அம்சங்களும் உள்ளது.

Vivo X50 Pro கைபேசியில் 48MP முதன்மை sensor உடன் இணைந்த 13MP portrait கேமரா, ஒரு 8MP telephoto lens மேலும் ஒரு 8MP macro lens கொண்ட quad-camera setup உள்ளது. கூடுதலாக செல்பி எடுப்பதற்காக முன்பக்கத்தில் 32MP sensor உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Smartphones vivo india vivo x50 vivo x50 pro

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X