/tamil-ie/media/media_files/uploads/2023/01/vivo-x90-series-featured.jpg)
விவோ முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாகும். பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது புதியதாக X90 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. X90, X90 Pro, and X90 Pro+ போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன்களுக்கான ப்ரீ சேல்ஸ் ஜனவரி 27-ம் தேதி தொடங்கும் என்றும் பிப்ரவரி 3-ம் தேதி போன் அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
மூன்று ஸ்மார்ட்போன்களும் ஒரே display சைஸ் கொண்டுள்ளன. சில வேறுபாடுகள் மட்டும் இருக்கும். X90 மற்றும் X90 Pro ஆகியவை 1260 x 2800 pixels கொண்டுள்ளன. அதேவேலையில் X90 Pro+ 1440 x 3200 பிக்சல்கள் வரை கொண்டுள்ளன. X90 Pro+ ஆனது 1800 nits என அதிக வெளிச்சம், தெளிவைக் கொண்டிருக்கும். மற்ற இரண்டிலும் 1300 nits குறிப்பிடத்தக்க வகையில் வெளிச்சம் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 January pre sales! X90 Series Retail boxes
— Paras Guglani (@passionategeekz) January 19, 2023
Global, 3 Feb Launch #Vivopic.twitter.com/cWuliVZ2O4
Vivo X90 மற்றும் Vivo X90 Pro ஆகியவை Dimensity 9200 சிப் மூலம் இயக்கப்படுகின்றன, அதே நேரத்தில் Vivo X90 Pro+ ஆனது Snapdragon 8 Gen 2 பயன்படுத்தப்படுகிறது. 3 போன்களும் உயர் தர போட்டோ சென்சார்களை கொண்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போன்களின் விலை
Vivo X90 42,000 ரூபாய்க்கும், X90 Pro ரூ. 57,000 ரூபாய்க்கும், X90 Pro+ ரூ. 74,000-க்கும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்து நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல்களை விரைவில் வெளியிடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.