மாஸ் காட்டும் விவோ.. X90 சீரிஸ் விரைவில் அறிமுகம்.. புதிய வசதிகள் என்ன? | Indian Express Tamil

மாஸ் காட்டும் விவோ.. X90 சீரிஸ் விரைவில் அறிமுகம்.. புதிய வசதிகள் என்ன?

விவோ X90 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

மாஸ் காட்டும் விவோ.. X90 சீரிஸ் விரைவில் அறிமுகம்.. புதிய வசதிகள் என்ன?

விவோ முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாகும். பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது புதியதாக X90 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. X90, X90 Pro, and X90 Pro+ போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன்களுக்கான ப்ரீ சேல்ஸ் ஜனவரி 27-ம் தேதி தொடங்கும் என்றும் பிப்ரவரி 3-ம் தேதி போன் அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

மூன்று ஸ்மார்ட்போன்களும் ஒரே display சைஸ் கொண்டுள்ளன. சில வேறுபாடுகள் மட்டும் இருக்கும். X90 மற்றும் X90 Pro ஆகியவை 1260 x 2800 pixels கொண்டுள்ளன. அதேவேலையில் X90 Pro+ 1440 x 3200 பிக்சல்கள் வரை கொண்டுள்ளன. X90 Pro+ ஆனது 1800 nits என அதிக வெளிச்சம், தெளிவைக் கொண்டிருக்கும். மற்ற இரண்டிலும் 1300 nits குறிப்பிடத்தக்க வகையில் வெளிச்சம் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vivo X90 மற்றும் Vivo X90 Pro ஆகியவை Dimensity 9200 சிப் மூலம் இயக்கப்படுகின்றன, அதே நேரத்தில் Vivo X90 Pro+ ஆனது Snapdragon 8 Gen 2 பயன்படுத்தப்படுகிறது. 3 போன்களும் உயர் தர போட்டோ சென்சார்களை கொண்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போன்களின் விலை

Vivo X90 42,000 ரூபாய்க்கும், X90 Pro ரூ. 57,000 ரூபாய்க்கும், X90 Pro+ ரூ. 74,000-க்கும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்து நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல்களை விரைவில் வெளியிடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Vivo x90 series may launch on this date tipster reveals packaging