/tamil-ie/media/media_files/uploads/2019/05/D7VR1QbVsAA_eAi.jpg)
Vivo Z5x Smartphone specifications, Price, Availability
Vivo Z5x Smartphone specifications, Price, Availability : விவோ நிறுவனத்தின் Z சீரியஸில் புதிதாக போன் ஒன்று வெளியாகியுள்ளது. Z5x என்ற மாடலில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனில் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே, மூன்று பின்பக்க கேமராக்கள், குவால்கோம் ஸ்நாப்ட்ராகன், மற்றும் 5000mAh பேட்டரி என்று அசத்தல் சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளது இந்த ஸ்மார்ட்போன். சீனாவில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை 1,398 யுவான் ஆகும். இந்திய விலையில் ரூ.14,000 ஆகும்.
Vivo Z5x Smartphone specifications, Price, Availability
இந்த ஸ்மார்ட்போன் 4 வித்தியாசமான ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளுடன் வெளியாகிறது.
4GB RAM + 64GB ஸ்டோரேஜ் - யுவான் 1,398 (ரூபாய் 14,000)
6GB RAM + 64GB ஸ்டோரேஜ் - யுவான் 1,498 (ரூபாய் 15,000)
6GB RAM + 128GB ஸ்டோரேஜ் - யுவான் 1,698 (ரூபாய் 17000)
8GB RAM + 128GB ஸ்டோரேஜ் - யுவான் 1,998 (ரூபாய் 20,000)
Vivo Z5x நிறங்கள்
அரோரா, எக்ஸ்ட்ரீம் நைட் ப்ளாக், மற்றும் பேந்தோம் ப்ளாக் போன்ற நிறங்களில் இந்த போன் வெளியாகிறது.
Vivo Z5x specifications and features
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 710 ப்ரோசசர்
6.53 இன்ச் ஃபுல் எச்.டி. ஸ்க்ரீன் கொண்டுள்ளது.
2340 x 1080 பிக்சல் ரெசலியூசன்
19.5:9 அஸ்பெக்ட் ரேசியோ
கேமரா : 16 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. மூன்று பின்பக்க கேமராக்களைக் கொண்டுள்ளது. 16எம்.பி + 8 எம்.பி + 2 எம்.பி செயல்திறன் மிக்கவை. ஆண்ட்ராய்ட் 9 பை இயங்குதளத்தில் இந்த போன் இயங்குகிறது.
மேலும் படிக்க : ஆப்பிளுடன் கை கோர்க்கும் சாம்சங் நிறுவனம்… காரணம் என்ன?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.