ஆப்பிளுக்குப் போட்டியாக ஒரிஜின் ஓ.எஸ் -6... விவோ போன்கள் இனி சூப்பர் ஸ்பீட்தான்!

விவோ நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான புதிய யூசர் இண்டர்பேஸ் OriginOS 6-ஐ சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அக்.15 அன்று உலகளவில் அறிமுகமாகவுள்ளது. புதிய வடிவமைப்பு, வேகமான செயல்பாடு மற்றும் மேம்பட்ட ஏ.ஐ. அனுபவத்தை வழங்க உள்ளது.

விவோ நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான புதிய யூசர் இண்டர்பேஸ் OriginOS 6-ஐ சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அக்.15 அன்று உலகளவில் அறிமுகமாகவுள்ளது. புதிய வடிவமைப்பு, வேகமான செயல்பாடு மற்றும் மேம்பட்ட ஏ.ஐ. அனுபவத்தை வழங்க உள்ளது.

author-image
WebDesk
New Update
Vivo unveils Android 16-based OriginOS 6

ஆப்பிளுக்குப் போட்டியாக ஒரிஜின் ஓ.எஸ்-6... விவோ போன்கள் இனி சூப்பர் ஸ்பீட்!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ, தனது புதிய ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான OriginOS 6 யு.ஐ. (UI) அதிகாரப்பூர்வமாக சீனாவில் வெளியிட்டுள்ளது. இது உலக அளவில் அக்டோபர் 15 அன்று அறிமுகமாகவுள்ளது. விவோவின் இந்த புதிய 'அலங்காரம்', ஆப்பிளின் iOS 26-ல் உள்ள 'லிக்விட் கிளாஸ்' போன்ற மங்கலான கண்ணாடி (Translucent) வடிவமைப்பு அம்சங்களுடன், கண்களைக் கவரும் புதிய தோற்றத்தைப் பெறுகிறது. வெறும் அழகு மட்டுமல்ல, செயல்திறன் மற்றும் பேட்டரி ஆயுளிலும் பல அதிரடி மேம்பாடுகளை OriginOS 6 கொண்டு வருகிறது.

Advertisment

இந்தியாவிலும் உலகச் சந்தைகளிலும் உள்ள விவோ, ஐக்யூ போன்களில் இப்போதுள்ள FunTouch OS நீக்கப்பட்டு, ஆண்ட்ராய்டு 16 உடன் இந்த புதிய OriginOS தான் வரப்போகிறது. OriginOS 6-ன் வடிவமைப்பு, ஆப்பிள் iOS 26-ன் கவர்ச்சியான அம்சங்களால் ஈர்க்கப்பட்டுள்ளது தெரிகிறது. ஸ்கிரீன் முழுவதும் (UI) மங்கலான (Translucent) வடிவமைப்பு மற்றும் மென்மையான அடுக்கு விளைவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு அடுக்குக்கும் மற்றோர் அடுக்குக்கும் உள்ள வித்தியாசத்தை எளிதாக அறிய, 'கிரேஜுவல் ப்ளர்' (Gradual Blur) என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'லைட் & ஷேடோ ஸ்பேஸ்' (Light and Shadow Space) அம்சம், திரையில் உள்ள கூறுகளுக்கு ஆழமான முப்பரிமாண (3D) விளைவுகளைக் கொடுத்து, மிக யதார்த்தமான தோற்றத்தை வழங்குகிறது. இது தவிர, லாக் ஸ்கிரீனின் அறிவிப்புகள், சாதன அசைவுக்கு ஏற்ப மாறும் லைவ் வீடியோ வால்பேப்பர், விவோவின் ஏ.ஐ. அசிஸ்டெண்ட் திறக்கும்போது வரும் புதிய லைட் அசைவூட்டங்கள் எனப் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விவோ சீனாவின் கூற்றுப்படி, OriginOS 6 செயல்திறன் மேம்படுத்தல்களைக் கொண்டு வருகிறது. புதிய சாப்ட்வேருடன் ஃபிரேம் வீதத்தின் நிலைத் தன்மை 11% வரை மேம்பட்டுள்ளதாகவும், நினைவக மறுசுழற்சி (memory recycling) 15% அதிகரித்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஆப்ஸ் முன்பு இருந்ததைவிட 11% வேகமாகத் திறக்கப்படுவதாக விவோ கூறியுள்ளது. கணினி அளவிலான அசைவூட்டங்களும் (System-wide animations) புதுப்பிக்கப்பட்டு, மென்மையான மாற்றங்களையும் அதிக துலங்கல் (responsive) காட்சிகளையும் வழங்குகின்றன.

Advertisment
Advertisements

பேட்டரி ஆயுள் என்பது இந்த அப்டேட்டின் மற்றொரு முக்கிய அம்சம். மேம்படுத்தப்பட்ட கணினி அளவிலான மின் மேலாண்மை மற்றும் பின்னணி மேம்படுத்தல் காரணமாக, OriginOS 6 இயங்கும் சாதனங்கள், தொடர்ச்சியான வீடியோ பார்க்கும் போது 18% வரை அதிக நேரம் நீடிக்கும் என்றும், கேமிங் அமர்வுகளின்போது 14% வரை அதிக நேரம் நீடிக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

செயற்கை நுண்ணறிவில் (AI) விவோ ஒரு படி மேலே சென்றுள்ளது. நீங்க எடுத்த லைவ் புகைப்படங்களில் (Live Photos) உங்களுக்குத் தேவையற்ற பொருட்களை ஏ.ஐ. உதவியுடன் நேரடியாக நீக்கும் வசதி உள்ளது. Xiao V Memory 2.0 இது குறிப்புகள், நினைவூட்டல்கள் மற்றும் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் தகவல்களை ஏ.ஐ. உதவியுடன் ஒழுங்கமைக்கும் சூப்பர் ஹப். இது OnePlus Mind Space, Nothing Essential Space போன்றவற்றுக்குப் போட்டியாக இருக்கும்.

ஃபைல்கள், இ-மெயில் மற்றும் குறிப்புகள் (Notes) போன்ற ஆப்ஸில் உள்ள தேடல் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. நீங்க சாதாரண மொழியில் (உதாரணமாக: "சென்ற வாரம் பிரியாணி பற்றிய மெயில்") தேடினால் கூட, ஏ.ஐ. மூலம் துல்லியமான ஆவணங்கள் அல்லது செய்திகளைக் கண்டறிய முடியும். விவோவின் இந்த OriginOS 6, மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உலகில் புதிய அத்தியாயத்தைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: