ப்ரிபெய்ட் திட்டங்களில், தற்பொழுது அதிக பயன்பாட்டில் இருப்பது புதிய வரவான ரிலையன்ஸ் ஜியோ. இதற்கு போட்டியாக வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்த இரு நிறுவனங்களும் ஒரு நாளுக்கு ஒரு ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் வசதியை ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. வோடபோன் தற்பொழுது இரு திட்டங்களை அறிவித்துள்ளது, ரூ.509 மற்றும் ரூ.458, இதில் ஒரு நாளுக்கு ஒரு ஜிபி டேட்டா மற்றும் ரோமிங், எஸ்டிடி மற்றும் உள்ளூர்க்கு அன்லிமிடெட் கால் சேவையை அறிமுகம் படுத்தியுள்ளது. ஏர்டெலும் தனது திட்டங்களை சீர்செய்து, 70 நாட்களுக்கு ரூ. 448 ரீசார்ஜ் அறிவித்துள்ளது. ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிக பயன்தரும் ரீசார்ஜ்கள்.
வோடபோனின் ரூ.509 மற்றும் ரூ.458 ரீசார்ஜ் திட்டம்
வோடபோன் ரூ.509 மற்றும் ரூ.458 எனும் இரு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த ஒரு திட்டத்திலும் ரோமிங், எஸ்டிடி மற்றும் உள்ளூர்க்கு அன்லிமிடெட் கால் சேவையை அளித்துள்ளது. இன்டர்நெட் சேவையை பொறுத்தவரை ஒரு நாளுக்கு ஒரு ஜிபி டேட்டா 3ஜி மற்றும் 4ஜியில் வழங்குகிறது. 509 ரூபாய் திட்டம் 84 நாட்கள் வரை நீடிக்கும் திட்டம், அதவாது உங்களுக்கு மொத்தம் 84 ஜிபி டேட்டா கிடைக்கும்.
அடுத்த திட்டமான 458 ரூபாய் திட்டம் 70 நாட்களுக்கு மட்டுமே, மொத்தம் 70 ஜிபி. வோடபோனின் அன்லிமிடெட் கால் சேவையில், ஒரு நாளுக்கு 250 நமிடம் என்றும் ஒரு வாரத்திற்கு 1000 நிமிடங்கள் மட்டுமே பேச முடியும் என்கிற கட்டுப்பாடு உள்ளது. இதோடு ஒரு நாளுக்கு 100 இலவச SMS கிடைக்கிறது. ஒரு நாளுக்கு ஒரு ஜிபி மேல் பயன்படுத்தினால் டேட்டா வேகம் குறைந்து விடும்.
ஏர்டெலின் ரூ 448 மற்றும் ரூ 399 திட்டம்
ஏர்டெலின் ரூ 399 திட்டம், உள்ளூர் மற்றும் எஸ்டிடி அன்லிமிடெட் கால் சேவை மற்றும் 70 ஜிபி டேட்டா உடன் வருகிறது. அதாவது ஒரு நாளுக்கு ஒரு ஜிபி டேட்டா 70 நாட்களுக்கு. இதில் இலவச ரோமிங் கால் சேவை கிடையாது.
ரூ 448 திட்டத்தில் இலவச ரோமிங், எஸ்டிடி மற்றும் உள்ளூர்க்கு அன்லிமிடெட் கால் சேவை உள்ளது. அதே போல் 70 நாட்களுக்கு 70 ஜிபி டேட்டாவும் உள்ளது. மேலும் இத்திட்டத்தில் ஒரு நாளுக்கு 100 இலவச SMSம் கிடைக்கிறது.
அதேபோல் ஒரு நாளுக்கு ஒரு ஜிபி மேல் பயன்படுத்தினால் டேட்டா வேகம் குறைந்து விடும். ஆனால் அன்லிமிடெட் கால் சேவை ஒரு நாளுக்கு 300 நிமிடம் மற்றும் ஒரு வாரத்திற்கு 1200 நிமிடம் ஆகும். தற்பொழுது ஆர்டெலில் 84 நாட்களுக்கான திட்டம் எதுவுமில்லை.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 399 மற்றும் ரூ 459 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டமே வோடபோன் மற்றும் ஆர்டெல் நிறுவனங்களை மேல் குறிப்பிட்ட திட்டங்களை அறிவிக்க தூண்டியது. ரிலையன்ஸ் ரூ. 399 திட்டம், 70 நாட்களுக்கு 70 ஜிபி டேட்டா, இலவச ரோமிங், எஸ்டிடி மற்றும் உள்ளூர் அன்லிமிடெட் கால் சேவை கொண்டது. இதில் ஒரு நாளுக்கு 100 இலவச SMSகள் மற்றும் ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ மியூசிக்கிற்கு இலவச சப்ஸிக்ரிப்சன் அளிக்கிறது.
இதே திட்டத்தை 84 நாட்களுக்கு ரூ 459க்கு கொடுக்கிறது.
வாடிக்கையாளர்கள் கவனிக்க, இந்த இணைப்பு சேவையை அனுபவிக்க ரூ. 99, ஒரு முறை கட்டணத்தை செலுத்தி ஜியோ பிரைம் உறுப்பினராக இணைய வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.