Vodafone, Airtel, Jio Best Prepaid Plans Tamil News : Vi (வோடபோன் ஐடியா) தற்போது அதன் ரூ.2,595 ப்ரீபெய்ட் ஆண்டு திட்டத்துடன் கூடுதல் 50 ஜிபி டேட்டாவை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம், தொலைதொடர்பு நிறுவனமான குறைந்த விலையில் நிறைய நன்மைகளை வழங்கி வருகிறது. நீண்ட கால வோடபோன் திட்டம் 2 ஜிபி தினசரி டேட்டாவை கொண்டு அனுப்பப்படுகிறது. அதாவது நீங்கள் மொத்தம் 730 ஜிபி டேட்டா பெறுவீர்கள். இந்த திட்டத்தில் இந்தியாவிற்குள் எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். ஒரு வருடத்திற்கு ZEE5 பிரீமியம் சந்தாவையும் Vi வழங்குகிறது. இந்த பேக் 365 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு.
இப்போது, கூடுதல் 50 ஜிபி டேட்டாவையும் பெறுவீர்கள். இது ஒரு குறிப்பிட்ட கால சலுகைதான். கூடுதல் டேட்டா நன்மையுடன், Vi பயனர்கள் 780GB டேட்டாவை பெறுவார்கள். இந்தத் திட்டத்தில் Vi மூவிஸ் மற்றும் TV Classic மற்றும் ‘Weekend Data Rollover’ வசதியையும் அணுகலாம்.
ரூ.2,595 ப்ரீபெய்ட் திட்டத்தை வாங்கினால், அடிப்படையில் நீங்கள் குறிப்பிட்ட அனைத்து சலுகைகளையும் சுமார் 216 ரூபாய்க்கு மாத அடிப்படையில் பெறுகிறீர்கள் என்று அர்த்தம். குறைந்த விலையில் நிறைய நன்மைகளைப் பெறுவதால் இது ஒரு சிறந்த ப்ரீபெய்ட் திட்டம்தான். கூடுதல் 50 ஜிபி டேட்டாவை பெறுவதற்குப் பயனர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து ப்ரீபெய்ட் திட்டத்தை வாங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த வாய்ப்பை முதலில் டெலிகாம் டாக் கண்டறிந்தது.
ஜியோ ஆண்டு ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.2,399 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த நீண்ட கால திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி வழங்குகிறது. மொத்தம் 730 ஜிபி டேட்டா உள்ளது. எந்தவொரு நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான காம்ப்ளிமென்டரி அணுகல் ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும். இந்தத் திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். ரூ.2121 வருடாந்திர ஜியோ திட்டமும் இதில் உள்ளது. இது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, இந்தியாவில் எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த பேக் 336 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
ஏர்டெல் ஆண்டு ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் தற்போது ரூ.2,498 நீண்ட கால ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 365 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 1 மாத அமேசான் பிரைம் வீடியோவும், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தாவுக்கான அணுகலும் கிடைக்கிறது. மேலும், இலவச 400+ லைவ் டிவி சேனல்கள், அன்லிமிடெட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது. ஃபாஸ்டேகில் ரூ.100 கேஷ்பேக், ஹலோடியூன்களுக்கான இலவச அணுகல், விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமிக்கு உறுப்பினர் ஆகிய அம்சங்களையும் பெறலாம். ரூ.2,698 ரீசார்ஜ் திட்டமும் உள்ளது. இது மேற்கூறிய அனைத்து நன்மைகளையும் ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவையும் வழங்குகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"