Advertisment

ரூ.95க்கு ரீசார்ஜ்; 28 நாள் வேலிடிட்டி: புதிய திட்டத்தை இறக்கிய வோடபோன்!

வோடபோன் ஐடியாவின் புதிய ரூ 95 ரீசார்ஜ் திட்டம், டேட்டா மற்றும் OTT நன்மைகளை தேடும் பயனர்களுக்கு மலிவு விலையில் தீர்வை வழங்குவதோடு சேமிப்பையும் உறுதி செய்கிறது.

author-image
WebDesk
New Update
Smartphones, Reliance Jio, Vodafone, Idea, BSNL, Best 1 GB data Per Day Plans,

வோடபோன் ரூ.95க்கு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வோடபோன் ரூ.98 ரீசார்ஜ் திட்டம் | இந்தியாவில் பிரபலமான தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களில் ஒன்றான வோடபோன் ஐடியா (Vodafone Idea- Vi) ஒரு புதிய மலிவு விலை ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை வெறும் ரூ.95 ஆகும்.
இந்த புதிய திட்டம் அதன் பயனர்களுக்கு டேட்டா மற்றும் OTT நன்மைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டரான வோடபோன் 210 மில்லியன் பயனர்களுக்கு சேவை வழங்குகிறது.

Advertisment

ரூ.95 ரீசார்ஜ் திட்டம்

Vi இன் இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் பயனர்களுக்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் 4GB டேட்டாவை வழங்குகிறது. OTT ஸ்ட்ரீமிங்கை ரசிப்பவர்களுக்கு சோனிலிவ் சந்தாவைச் சேர்ப்பது இந்த திட்டத்தின் தனித்துவமான அம்சமாகும்.
எனினும், வோடஃபோன் ஐடியாவின் புதிய திட்டத்தில் அழைப்பு வசதி இல்லை. இருப்பினும், பயனர்கள் டேட்டாவை பயன்படுத்தி வாட்ஸ்அப் கால் செய்துக்கொள்ளலாம். மேலும், மாதாந்திர SonyLiv சந்தா ரூ. 399 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வோடபோனின் இந்தப் புதிய திட்டத்துடன், பயனர்கள் 28-நாள் SonyLiv சந்தாவை வெறும் ரூ.95க்கு அனுபவிக்க முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Vodafone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment