/tamil-ie/media/media_files/uploads/2021/03/vodafone-idea-new-logo-vi-1200.jpg)
பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து, வோடபோன் ஐடியாவும் (Vi) ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கான கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளன. ஜியோ, ஏர்டெல் இந்த புதிய கட்டணத்தை ஜூலை 3முதல் அமல்படுத்தும் நிலையில், வோடபோன் ஐடியா புதிய விலைகளை ஜூலை 4 முதல் அமல்படுத்தும் என்று கூறியுள்ளது. எனினும் இந்த நிறுவனங்கள் எதுவும் தற்போது வழங்கப்படும் நன்மைகள், சலுகைகளில் மாற்றம் இல்லை என்றும் கூறியுள்ளன.
ஜியோ 12-25 சதவிகிதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது, ஏர்டெல் 11-21 சதவிகிதம் விலையை உயர்த்தியுள்ளது. வோடபோன் ஐடியா 12-25 சதவிகிதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
Vodafone Idea (Vi) அதன் பேஸ் திட்டத்தை ரூ.179 திட்டத்தை 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 2ஜிபி மொபைல் டேட்டாவுடன் வரும் திட்டத்தை ரூ.199 ஆக உயர்த்தியுள்ளது.
அதேசமயம் 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா கொண்ட பிரபலமான ரூ.479 திட்டமானது ஜூலை 4 முதல் உங்களுக்கு ரூ.579 செலவாகும். கடனில் சிக்கித் தவிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் வருடாந்திர திட்டத்தின் விலையையும் ரூ.500 வரை உயர்த்தியுள்ளது.
அன்லிமிடெட் நைட் டேட்டா பெர்க், பெயர் குறிப்பிடுவது போல் 12 AM முதல் 6 AM வரை வரம்பற்ற மொபைல் டேட்டாவை வழங்குகிறது, இது அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கும் ரூ. 299 அல்லது அதற்கு மேற்பட்ட ப்ரீபெய்ட் தினசரி டேட்டா திட்டங்களுக்கும் பொருந்தும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.