இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிடெட் (VIL)மீண்டும் ரூ.289 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும் இப்போது இதன் வேலிடிட்டி நாட்களை குறைத்துள்ளது.
வோடபோன் ஐடியா ரூ.289 திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ.289 திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி, 4ஜிபி டேட்டா, 600 எஸ்எம்எஸ் மற்றும் 40 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. முன்னதாக, இது 48 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வந்தது. இப்போது இதே திட்டத்தை அறிமுகம் செய்து வேலிடிட்டியை குறைத்துள்ளது.
சேவையின் செல்லுபடியாகும் காலம் 8 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டம் மறைமுகமாக விலையை உயர்த்தி உள்ளது. இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான சராசரி தினசரி செலவு ரூ.6.02ல் இருந்து ரூ.7.225 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, மொத்தம் 40 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
இருப்பினும் இந்த திட்டம் சிலருக்கு பயனுள்ளதாக உள்ளது. அதிக டேட்டாவைப் பயன்படுத்த விரும்பாதவர்கள், ஃவைபை பயனர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“