scorecardresearch

Vi 5G services: பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்: அடுத்த மாதம் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்யும் வி.ஐ

Vodafone Idea to launch 5G services in India in June: வோடபோன் ஐடியா அடுத்த மாதம், ஜூன் மாதம் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vodafone Idea 5G
Vodafone Idea 5G

வோடபோன் ஐடியா (Vi), இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாகும். நிறுவனம் தற்போது அதன் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கான நிதியைப் பெற வங்கிகளுடன் இணைந்துள்ளதாகவும், பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொலைத் தொடர்புத் துறையின் (DoT) மூத்த அதிகாரியின் கூற்றுப்படி, நிறுவனம் ஜூன் மாதத்திற்குள் நிதியைப் பெற வாய்ப்புள்ளது மற்றும் அதே மாதத்தில் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தும் எனவும் கூறினார். நிறுவனம் ஏற்கனவே மூன்றாவது
காலாண்டிற்கான உரிமக் கட்டணம் செலுத்தியுள்ளதாவும், நான்காவது காலாண்டிற்கான தொகையில் பகுதியளவு பணம் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 5ஜி ஸ்பேஸில் Vi நுழைவது ஜியோ, ஏர்டெல் என்ற டுயோபோலியை உடைக்கும் என்றும் அவர் கூறினார். இது வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் என்றார்.

மற்றொரு அறிக்கையின்படி, 5ஜி நெட்வொர்க்கிங் உபகரணங்களை வழங்கும் ஃபின்னிஷ் நிறுவனமான நோக்கியா Vi உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நோக்கியா ஏற்கனவே ஏர்டெல் மற்றும் ஜியோவிற்கு சப்ளையரா இருந்து வருகிறது.

இந்தியாவின் முதல் தனியார் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ, 2-வது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் இந்தியாவில் 5ஜி சேவை கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது தொடங்கி வழங்கி வருகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் 5ஜி சேவை வழங்கி, அதனை விரிவுபடுத்தி வருகிறது. ஜியோ ஸ்டாண்டலோன் (எஸ்ஏ) 5ஜி தொழில்நுட்ப முறையிலும், ஏர்டெல் நான்- ஸ்டாண்டலோன் (என்.எஸ்.ஏ) முறையிலும், சேவை வழங்கி வருகிறது. வோடபோன் ஐடியா எந்த முறையை தேர்ந்தெடுக்கும் என்பது குறித்து தெரியவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Vodafone idea could launch 5g services in india in june