Nazara Technologies உடன் இணைந்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனமான வோடபோன் ஐடியா, இந்தியாவில் கேம் பிரியர்களுக்காக புதிதாக Vi கேமிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில், வோடபோன் வாடிக்கையாளர்கள் Vi Games செயலி மூலமாக பல வகையான கேமிங்களை விளையாடும் அனுபவத்தை பெறலாம். பயனர்கள் Vi கேம்களை Vi பயன்பாட்டிலேயே பெறுவார்கள்
Vi கேம்களின் கீழ், வோடபோன் ஐடியா பயனர்கள் action, adventure, arcade, casual, fun, puzzle, racing, sports, education, and strategy என 10 பிரபலமான வகைகளில் 1200+ ஆண்ட்ராய்டு மற்றும் HTML 5 அடிப்படையிலான மொபைல் கேம்களை விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
வோடபோன் ஐடியாவின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி அவ்னீஷ் கோஸ்லா கூறுகையில், " இந்தியாவில் கேமிங் பயன்பாடு அதிகரித்திருப்பதை காண்கிறோம். கேமிங் ஆர்வலர்களில் 95%க்கும் அதிகமானோர் மொபைல் சாதனத்தை கேம் விளையாட பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போனின் அதீத பயன்பாடு மற்றும் 4ஜி தொழில்நுட்பம், கேமில் அதிக நேரத்தை செலவிடுவதை சிறந்த பொழுதுபோக்கு தளமாக மாற்றியமைத்துள்ளது என்றார்.
VI GAMES திட்டங்கள்
Vi Games பிளாட்டினம், கோல்டு, இலவசம் என மூன்று வெவ்வேறு பிரிவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோல்டு பிரிவுக்கான சந்தா போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு ரூ.50 மற்றும் ப்ரீ-பெய்டுக்கு ரூ.56 ஆகும். இதில், பயனர்கள் 30 கேம்களை விளையாடலாம்.
மேலும், ரூ. 499 மற்றும் அதற்கு மேற்பட்ட திட்டங்களைக் கொண்ட போஸ்ட்-பெய்டு பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 இலவச கேம்கள் வழங்கப்படும். அவர்கள் இந்த பிரிவில் உள்ள அனைத்து கேம்களையும் பதிவிறக்கம் செய்து, இலவசமாக 30 நாள்களுக்கு விளையாடலாம்.
பிளாட்டினம் பிரிவை பொறுத்தவரை, ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.26 மற்றும் போஸ்ட்பெய்டு ரூ.25 செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ், பயனர்கள் பிளாட்டினம் விளையாட்டை விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.
இதுதவிர, இலவச விளையாட்டு பிரிவில் 250 கேம்களை பயனர்கள் இலவசமாக விளையாடலாம். ஆனால், விளம்பரங்களை பார்க்கக்கூடும்.
Nazara Technologies இன் நிறுவனர் Nitish Mittersain கூறுகையில், " கேமிங் இந்தியாவில் பொழுதுபோக்கின் எதிர்காலம் மட்டுமல்ல. ஏற்கனவே ஒவ்வொரு நாளும் மொபைல் போன்களில் கேம்களை விளையாடும் நூற்றுக்கணக்கான மில்லியன் இந்தியர்களின் முக்கிய பொழுதுபோக்காக உள்ளது. எங்கள் கேமிங் உள்ளடக்கம், இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் interactive entertainment ஆகியவற்றின் முழு போர்ட்ஃபோலியோவையும் பயனர் தளத்திற்கு கொண்டு வர Vi யுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.