வி வழங்கும் புதிய அன்லிமிடெட் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்!

Vodafone Idea launches Rs 1699 and Rs 2299 postpaid plans Tamil News போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகள் அடங்கும்.

Vodafone Idea launches Rs1699 and Rs 2299 postpaid plans Tamil News
Vodafone Idea launches Rs1699 and Rs 2299 postpaid plans Tamil News

Vodafone Idea launches Rs.1699 and Rs.2299 postpaid plans Tamil News : வி (வோடபோன் ஐடியா) ரூ.1,699 மற்றும் ரூ.2,299 உட்பட இரண்டு புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு RedX குடும்பத் திட்டங்கள், பல இணைப்புகளை ஆதரிக்கின்றன மற்றும் அன்லிமிடெட் நன்மைகள், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் பிற OTT பயன்பாடுகளுக்கான இலவச அணுகலையும் வழங்குகின்றன. சமீபத்திய Vi போஸ்ட்பெய்ட் திட்டங்களைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.

ரூ.1,699 ரெட்எக்ஸ் குடும்பத் திட்டத்தை வி அறிமுகப்படுத்துகிறது

புதிய வி ரூ.1,699 ரெட்எக்ஸ் குடும்பத் திட்டத்தை வாங்கினால் அது ஒரு மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். இது மூன்று உறுப்பினர்கள் இணைப்புக்கான ஆதரவை வழங்குகிறது. அதாவது அடிப்படையில் மூன்று வெவ்வேறு பயனர்கள் இந்தத் திட்டத்தை எடுக்க முடியும். போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகள் அடங்கும். மேலும், அன்லிமிடெட் டேட்டா நன்மைகள் மற்றும் மாதத்திற்கு 3,000 எஸ்எம்எஸ் செய்திகளையும் பெறுவீர்கள்.

மற்ற நன்மைகளில் ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா, ஒரு வருட நெட்ஃப்ளிக்ஸ் சந்தா மற்றும் ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தா ஆகியவை அடங்கும். வி திரைப்படங்கள் மற்றும் டிவி விஐபி, சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலைய ஓய்வறைகளுக்கு (வருடத்திற்கு நான்கு முறை) அணுகலை வழங்குகிறது.

வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,999 மதிப்புள்ள ஏழு நாட்கள் இலவச ரோமிங் பேக் கிடைக்கும். இந்த திட்டம் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு நிமிடத்திற்கு ரூ.0.50, இங்கிலாந்து நிமிடத்திற்கு ரூ.3-க்கும் ஐஎஸ்டி அழைப்புகளை வழங்குகிறது. மேலும்,14-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சிறப்பு கட்டணங்களை வழங்குகிறது.

முதன்மை இணைப்பு எல்லாவற்றிற்கும் அணுகலைப் பெறும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், மற்ற இணைப்புகளுக்கு 3000 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகள் மட்டுமே கிடைக்கும்.

Vi அதன் போர்ட்ஃபோலியோவில் ரூ.2,299 ரெட்எக்ஸ் குடும்பத் திட்டத்தை சேர்க்கிறது

வோடபோன் ஐடியாவின் அதிக விலை கொண்ட ரூ.1,699 திட்டம், போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள அதே நன்மைகளுடன் வருகிறது. ஆனால், ரூ.2,299 போஸ்ட்பெய்ட் திட்டம் மொத்தம் ஐந்து உறுப்பினர் இணைப்புகளை ஆதரிக்கிறது. Vi-ன் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள், ஏற்கனவே நிறுவனத்தின் தளத்தில் நேரலையில் உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vodafone idea launches rs1699 and rs 2299 postpaid plans tamil news

Next Story
வாட்ஸ்அப் டிப்ஸ் : சாட்களை நிரந்தரமாக மறைப்பது எப்படி?Whatsapp tips how to permanently hide chats Android Archive Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com