/tamil-ie/media/media_files/uploads/2023/03/New-Project95.jpg)
Vodafone Idea (Vi)
வோடபோன் ஐடியா முன்னணி தகவல் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும். பயனர்களை கவர, வருவாய் அதிகரிக்க புது புது திட்டங்கள் மற்றும் ஆஃபர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது ஜிபி டேட்டா இலவமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. அதிலும் ஒரு ட்விஸ்டாக குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்குகிறது.
இலவச டேட்டா எப்படி பெறுவது?
வோடபோன் ஐடியா- இசை தள நிறுவனமான ஹங்காமா இணைந்து வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை வழங்குகிறது. வி.ஐ ஆப் மூலம் ஹங்காமா கோல்டு (Hungama Gold) சந்தாதாரர்களுக்கு இலவச டேட்டா சலுகை வழங்கப்படுகிறது.
ஹங்காமா கோல்டு சந்தா பெற்றவர்களுக்கு 6ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும். ஹங்காமா கோல்டு 3 மாத சந்தா விலை ரூ. 108 ஆகும். இந்த திட்டத்தில் 3 மாதங்களுக்கு விளம்பரமில்லா மியூசிக் அனுபவத்தைப் பெற முடியும். ஆஃப்லைனில் டவுன்லோடு செய்தும் பாடல்களைக் கேட்கலாம்.
பாட்காஸ்ட் பிரியர்களுக்காக ஹங்காமா கோல்டு திட்டம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஹங்காமா கோல்டு பயனர்கள் வி.ஐ-யின் 6ஜிபி டேட்டாவை இலவமாக பெறலாம். ஆனால் வேலிடிட்டி காலம் 15 நாட்களுக்கு மட்டுமே ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.