வோடபோன் ஐடியா இந்தியாவில் உள்ள தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும். 3-வது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக உள்ளது. ஜியோ, ஏர்டெல் 5ஜி சேவைகளை தொடங்கிய நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக நிறுவனம் இன்னும் சேவையை தொடங்கவில்லை.
இந்நிலையில், இரண்டு பேஸிக் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் வேலிடிட்டி காலத்தை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரூ.99 மற்றும் ரூ.128 ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டி காலத்தை குறைத்துள்ளது. ARPU எனப்படும் வருவாய் அதிகரிப்பை மேம்படுத்த நிறுவனம் இதை செய்துள்ளதாக கூறப்படுகிறது. வி.ஐ அதன் ARPU-ஐ அதிகரிக்க போராடி வருகிறது.
ரூ.99 திட்டம்
ரூ.99 திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களாகும். ஆனால் தற்போது 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது திட்டத்தின் தினசரி செலவு ரூ.3.53ல் இருந்து ரூ.6.6 ஆக உயர்ந்துள்ளது. திட்டத்தின் மற்ற நன்மைகள் அப்படியே இருக்கும். 200எம்.பி டேட்டா, ரூ.99 மதிப்புள்ள டாக்டைம் ஆகியவை வழங்கப்படும்.
ரூ.128 திட்டம்
ரூ.128 திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களில் இருந்து 18 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் தினசரி பயன்பாட்டு செலவு ரூ.4.57ல் இருந்து ரூ.7.11 ஆக உயர்ந்துள்ளது. இதன் வழங்கப்படும் பலன்கள் அப்படியே வழங்கப்படுகின்றன.
இருப்பினும் இந்த வேலிடிட்டி குறைப்பு மும்பை பகுதியில் மட்டுமே தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது அனைத்து பகுதிகளிலும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஏர்டெல் நிறுவனமும் தனது அடிப்படை கட்டணத்தை ரூ.99ல் இருந்து ரூ.155 ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“