/indian-express-tamil/media/media_files/5NR6UR4RAa2voXb3VhXM.jpg)
வோடபோன் ஐடியா இந்தியாவில் 3-வது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக இருந்து வருகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப திட்டங்களை வழங்கி வருகிறது. இருப்பினும் நிறுவனம் இன்னும் 5ஜி சேவையை இந்தியாவில் தொடங்க வில்லை. விரைவில் தொடங்குவதாக அறிவித்துள்ளது. எனினும் 4ஜி சேவையை பல்வேறு ஆபர்களுடன் வழங்கி வருகிறது.
அந்தவகையில் தற்போது, ரூ.248 விலையில் பல்வேறு ஓ.டி.டி தளங்கள், டி.வி சேனல்களுக்கான இலவச சந்தாக்களுடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ரூ.248 திட்டம்
ரூ.248 திட்டத்தில் அன்லிமிடெட் வாயிஸ் காலிங் வசதி, ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ், 6ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு சோனி லிவ், ஹாட்ஸ்டார், FanCode, Klikk, Manorama Max, Chaupal, Playflix, Nammaflix, Distro TV, Shemaroo Me, Hungama, YuppTV, NexGTV மற்றும் Pocket Films போன்ற ஓ.டி.டி சந்தாக்கள் இலவசமாக கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் 400 டிவி சேனல்களுக்கு சேர்க்கப்பட்டுள்ளது. இதையும் இலவசமாக டிவி. மொபைலில் கண்டு களிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.