Vodafone Idea vs Jio vs Airtel Best Unlimited Calling Prepaid Plans : நெட்வொர்க் கட்டணங்கள் கடந்த ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறந்து ப்ரீபெய்ட் ப்ளான்களை வெளியிட்டு வருகின்றன ஜியோ, வோடஃபோன், மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள். இந்நிறுவனங்கள் வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒரு பார்வை
பிரபலங்கள், ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்த ரஜினிகாந்த்!
Airtel Rs 149 vs Vodafone Idea Rs 149 plan vs Jio Rs 149 plan
ரூ. 149க்கான திட்டத்தின் கீழ் ஏர்டெல் நிறுவனம் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் 300 எஸ்.எம்.எஸ்களை அனுப்பிக் கொள்ளலாம். வோடஃபோன் நிறுவனமும் இதே போன்று டேட்டாவையும் எஸ்.எம்.எஸ்களையும் வழங்கி வருகிறது. ஜியோ நிறுவனம் இதே கட்டணத்தில் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டாவையும், நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்களையும், 300 இலவச டாக்டைம் நிமிடங்களையும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த பேக்கின் வேலிடிட்டி 24 நாட்களாகும். ஏர்டெல் மற்றும் வோடஃபோனின் வேலிடிட்டி 28 நாட்களாகும்.
மேலும் படிக்க : ஒன்றல்ல, இரண்டல்ல… ஒரே நேரத்தில் 6 ஐபோன்களை வெளியிடுகிறது ஆப்பிள்!
Airtel Rs 219 vs Vodafone Idea Rs 219 plan vs Jio Rs 199 plan
இந்த திட்டத்தின் கீழ் ஏர்டெல் நிறுவனம் 1ஜிபி டேட்டாவை நாள் ஒன்றுக்கு வழங்குகிறது. 100 இலவச எஸ்.எம்.எஸ்களையும் வாடிக்கையாளர்கள் அனுப்பிக் கொள்ளலாம். இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும். அதே போன்று வோடஃபோன் நிறுவனமும் நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்களையும், 1ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த இரண்டு திட்டங்களின் வேலிடிட்டி 28 நாட்களாகும். ஜியோ நிறுவனம் ரூ. 199 கட்டணத்தில் 1.5ஜிபி டேட்டாவை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 100 மெசேஜ்கள் அனுப்பிக் கொள்ளலாம். இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும். இந்த நாட்களுக்குள் இதர நெட்வொர்க்கில் பேசிக் கொள்ள 1000 இலவச நிமிடங்கள் டாக்டைம்களையும் வழங்குகிறது ஜியோ.
சென்னை பெடெஸ்டிரியன் ப்ளாசா குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
Airtel Rs 249 vs Vodafone Idea Rs 249 plan vs Jio Rs 249 plan
ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்.எம்.எஸ்கள் மற்றும் இலவச காலிங் வசதிகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. ஜியோ நிறுவனம் ரூ. 249 கட்டணத்தில் 2 ஜிபி டேட்டாவை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 100 மெசேஜ்கள் அனுப்பிக் கொள்ளலாம். இந்த நாட்களுக்குள் இதர நெட்வொர்க்கில் பேசிக் கொள்ள 1000 இலவச நிமிடங்கள் டாக்டைம்களையும் வழங்குகிறது ஜியோ.
Airtel Rs 398 vs Vodafone Idea Rs 399 plan vs Jio Rs 399 plan
ஏர்டெல் நிறுவனம் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர் நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்களை அனுப்பிக் கொள்ள இயலும். இதன் வேலிடிட்டி 56 நாட்களாகும். இதே சேவைகளை ஜியோ நிறுவனமும் வழங்குகிறது. இதர நெட்வொர்க்குடன் பேச 2000 இலவச நிமிட கால் சேவைகளையும் ஜியோ நிறுவனம் வழங்குகிறது.
Airtel Rs 598 vs Vodafone Idea Rs 599 plan vs Jio Rs 599 plan
ஏர்டெல் நிறுவனமும் வோடஃபோன் நிறுவனமும் இந்த திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 84 நாட்களாகும். ஜியோ நிறுவனம் வழங்கும் சேவைகள் முறையே நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்.எம்.எஸ்கள் மற்றும் 3000 இலவச காலிங் நிமிடங்கள். இதன் வேலிடிட்டியும் 84 நாட்களாகும்.
Airtel Rs 2,398 vs Vodafone Idea Rs 2,399 plan vs Jio Rs 2,199 plan
இந்த வருடாந்திர ப்ளான்கள் மூலம் ஏர்டெல் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. 100 இலவச மெசேஜ்கள் அனுப்பிக் கொள்ல இயலும், இதே சேவைகளை தான் ஜியோ நிறுவனமும் வோடஃபோன் நிறுவனமும் வழங்குகிறது. ஜியோவில் இருந்து இதர நெட்வொர்க்கில் பேச 12000 இலவச நிமிடங்களும் வழங்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.