Vodafone: புதிய AI மூலம் இயங்கும் (AI-powered) டிஜிட்டல் வாடிக்கையாளர் சேவை மற்றும் VIC எனப்படும் மெய்நிகர் உதவியாளர் (virtual assistant) ஆகியவற்றை அறிமுகப்படுத்த போவதாக வோடபோன் ஐடியா மே மாதம் அறிவித்தது. இந்த சேவை இப்போது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம், மை வோடபோன் ஆப் (My Vodafone app), மை ஐடியா ஆப் (My Idea app) மற்றும் வாட்ஸ் ஆப்பில் நேரலையில் உள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்த VIC சேவையை ORISERVE உருவாக்கியுள்ளது. பில் கட்டணம் செலுத்துவது (bill payments), ரீசார்ஜ்கள், VAS, திட்டம் செயல்படுத்துவது (plan activation), புதிய இணைப்பு (new connection), டேட்டா இருப்பு (data balance), பில் கோரிக்கை (bill requests) மற்றும் பயனர்களின் பல்வேறு கேள்விகளுக்கு இதனால் உடனடி பதில்களை அளிக்க முடியும் என நிறுவனம் கூறுகிறது. மேலும் இந்த சேவை 24 மணிநேரமும் 7 நாட்களும் நேரலையில் இயங்கும்.
VIC சேவை வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்துக்காக பிர்த்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று ORISERVE கூறுகிறது. இது அதிநவீன AI, NLP, ஆழமான கற்றல் மற்றும் பிற trailblazing தொழில்நுட்பங்களின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப்பில் இந்த சேவை எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பார்க்கலாம்.
முதலில் நீங்கள் வாட்ஸ் ஆப்பில் VIC உடன் ஒரு அரட்டையை (chat) ஆரம்பிக்க வேண்டும், இதை பல வழிகளில் செய்யலாம். முதலாவதாக, வோடபோன் ஐடியாவில் இருந்து உங்கள் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் VIC உடன் ஒரு உரையாடலை வாட்ஸ் ஆப்பில் ஆரம்பிக்கலாம். அடுத்தது நிறுவனத்தின் எண்ணை உங்கள் கைபேசியில் பதிவு செய்து வாட்ஸ் ஆப் மூலம் ஒரு அரட்டையை ஆரம்பிக்கலாம். வோடபோன் Care எண் 9654297000 ஐடியா Care எண் 7065297000.
Value added services ஐ சரிப்பார்க்க அல்லது செயல்படுத்த, டேட்டா இருப்பை சரிபார்க்க மற்றும் பலவற்றுக்கு இந்த சேவை மிகவும் உதவிகரமாக உள்ளது. ஆனால் வேடபோன் கூறுவதுப் போல் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகளுக்கு மாற்றாக இது இல்லை. ஆனால் நீங்கள் ஒரு நெரிசலில் சிக்கி, விரைவாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைப்பதை விட இதை பயன்படுத்துவது நிச்சயமாக உங்களுக்கு சிறிது நேரத்தை மிச்சப்படுத்தும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil