வோடஃபோன் நிறுவனம் தங்களின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 5 சிறப்பு பிளான்களை அறிவித்துள்ளது. அதில், டேட்டா, குறுந்தகவல், வாய்ஸ் ஆஃபர் உள்ளிட்டவை அந்த சிறப்பு பிளான்களில் உள்ளடங்கியுள்ளது.
அதன்படி, ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு ஒரு ஜிபி டேட்டா, 100 இலவச குறுந்தகவல்கள், அன்லிமிடெட் வாய்ஸ் ஆஃபர், ஆகியவற்றை 84 நாட்களுக்கு அனுபவிக்கலாம். அதேபோல், ரூ.458-க்கு ரீசார்ஜ் செய்தால் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் மேற்கண்ட ஆஃபரை 70 நாட்களுக்கும், ரூ.347-க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கும் பெற முடியும். மேலும், ரூ.199-க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கும், ரூ.79-க்கு ரீசார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கும் இந்த ஆஃபரை பெற முடியும்.