வோடபோன் வழங்கும் இலவச அன்லிமிடெட் அதிவேக டேட்டா!

Vodafone free unlimited high speed data at night எந்த தடையும் இல்லாமல், கூடுதல் செலவில்லாமல், அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சலுகை தருகிறது.

Vodafone now offering free unlimited high speed data at night Tamil News
Vodafone free unlimited high speed data at night

Vodafone free unlimited data at night Tamil News : Vi (வோடபோன்) சமீபத்தில் “இரவு நேர சலுகையை” அறிமுகப்படுத்தியுள்ளது. இது அன்லிமிடெட் அதிவேக இரவு நேர டேட்டாவை கூடுதல் செலவில்லாமல் கொடுக்கிறது. ரூ.249 மற்றும் அதற்கு மேற்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களை வாங்குபவர்களுக்கு இந்த சலுகை செல்லுபடியாகும். காலை 12:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இந்த இலவச அன்லிமிடெட் டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது. இரவு டேட்டா சலுகை ஏற்கெனவே அதிகாரப்பூர்வ தளத்தில் நேரலையில் உள்ளது.

“இணையம் மற்றும் OTT-ல் இரவுநேர செலவிடுதல் அதிகரித்து வருகிறது. அதிலும் தற்போது மக்கள் நெகிழ்வான மற்றும் தொலைதூர வேலைகளைச் செய்துகொண்டு அதிக நேரம் செலவழிக்கும் உள்ளடக்கத்தைப் பார்க்கிறார்கள். இந்த கோரிக்கையைப் பூர்த்தி செய்வதற்காக, Vi அன்லிமிடெட் அதிவேக இரவு நேர டேட்டாவை அறிவித்துள்ளது. அதிலும் எந்த தடையும் இல்லாமல், கூடுதல் செலவில்லாமல், அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குத் தருகிறது”என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

டேட்டாவில் எந்த தடையும் இல்லாததால், வாடிக்கையாளர்கள் பல்வேறு OTT பயன்பாடுகளிலிருந்து பல்வேறு உள்ளடக்கங்களை பிரவுஸ் செய்யலாம் மற்றும் பதிவிறக்கம் செய்யலாம். ரூ.249 மற்றும் அதற்கு மேற்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்கள் ஏற்கெனவே வார இறுதி டேட்டா ரோல்ஓவர் வசதிக்கான ஆதரவை வழங்குகின்றன. அதாவது பயன்படுத்தப்படாத டேட்டா வார இறுதிக்கு அனுப்பப்படும். இது தவிர, சில ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களும் டபுள் டேட்டாவை வழங்குகின்றன.

“இளைஞர்கள் போன்ற நுகர்வோர் பிரிவுகளின் நுகர்வு முறைகள், இரவில் அதிக டேட்டாவை பயன்படுத்துகிறார்கள் என்பதைக் குறிக்கின்றன. இந்தத் தொழில் முதல் முன்மொழிவுடன், அன்லிமிடெட் அதிவேக இரவு நேர டேட்டா மற்றும் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவரின் இரண்டு நன்மைகளையும் வழங்கும். Vi, அதன் அன்லிமிடெட் பயனர்களுக்கு அதிக மதிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் புதிய முயற்சி நெட்வொர்க்குடன் இணையும் தன்மையை அதிகரிப்பதையும் புதிய பயனர்களை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது”என்று வி கூறுகிறது.

அன்லிமிடெட் இரவு-டேட்டா சலுகையுடன் வோடபோன் ப்ரீபெய்ட் திட்டங்கள்

ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இது உண்மையிலேயே அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 1.5 ஜிபி தினசரி டேட்டாவை 28 நாட்களுக்குத் தருகிறது. நிறுவனத்தின் MyVi பயன்பாட்டைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்தால் கூடுதல் 5 ஜிபி டேட்டா கிடைக்கும். ரூ.299 ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் டாக் டைம் மற்றும் ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா ஆகியவை அடங்கும். இது 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. Vi-ல் அன்லிமிடெட் அழைப்பு சலுகைகளை வழங்கும் ரூ.449 ப்ரீபெய்ட் பேக்கில், 56 நாட்களுக்கு 4 ஜிபி தினசரி டேட்டாவும் உள்ளது.

ரூ.599 பேக் வாங்குவோருக்கு அன்லிமிடெட் டாக் டைம், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, 5 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும். இந்த திட்டம் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள். 5 ஜிபி கூடுதல் டேட்டாவைப் பெறப் பயனர்கள் இந்த திட்டத்தை MyVi பயன்பாடு வழியாக வாங்க வேண்டும்.

இந்தத் தளம் ரூ.699 ப்ரீபெய்ட் வோடபோன் திட்டத்தையும் குறிப்பிடுகிறது. இது, 4 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகளை பேக் செய்கிறது. புதிய இரவு-டேட்டா சலுகையை ஆதரிக்கும் இன்னும் சில ரீசார்ஜ் திட்டங்களும் உள்ளன. Vi-ன் தளத்தில் மீதமுள்ள திட்டங்களை நீங்கள் பார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vodafone now offering free unlimited high speed data at night tamil news

Next Story
உங்க டைம்லைன் உங்களுக்கு மட்டும்தான்: முகநூலில் ‘ப்ரொஃபைல் லாக்’ எளிய முறைHow to lock your facebook profile using your phone Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com