வோடஃபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரூ. 279 க்கு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வோடஃபோன் திட்டம்:
தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணியாக திகழும் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் சமீப காலமாக, ஜியோ நிறுவனத்துடன் நேரடியாக களத்தில் போட்டி போட்டு வருகிறது.
டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்னரே, பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. 2ஜி மற்றும் 3ஜி சேவையை பயன்படுத்தி வந்த அதிகப்படியான வாடிக்கையாளர்கள் ஜியோ வருகைக்கு பின்னர், அதிரடியாக 4ஜி சேவைக்கு மாறினர்.
அதன் பின்பு, மற்ற நிறுவனங்களும் 4ஜி சேவையை வழங்க முடிவு செய்தனர். இருப்பினும், சந்தையில், பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகின்றன. இதனை சற்றும் எதிர்பார்க்காத வோடஃபோன் தொடர்ந்து புதிய புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில்,வோடஃபோன் நிறுவனம் புதிதாக 84 நாட்களுக்கு 279 ரூபாயில் புதிய ரீ-சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தில் அனைத்து வாய்ஸ் கால்களும் இலவசம். மேலும் 84 நாட்களுக்கு சேர்த்து 4ஜிபி டேட்டா இலவசம் என்றும் அறிவித்துள்ளது. அதே போல், குறிப்பாக இந்த திட்டம், வாய்ஸ் கால்களுக்காவே அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுவாரசியம் என்னவென்றால், வோடஃபோனை தவிர்த்து மற்ற நிறுவனங்கள் அனைத்தும் 84 நாட்கள் வேலிடிட்டியை, ரூ. 300-க்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்தால்தான் வழங்குகின்றன. ரூ. 348-க்கு 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது ரிலையன்ஸ் ஜியோ.