வோடஃபோன் நிறுவனம் தங்களது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.348க்கு அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது.
இந்த ஆஃபரின்படி, 28 நாட்களுக்கு தினந்தோறும் 2 ஜிபி டேட்டாவை பெற முடியும். அதாவது, மாதத்திற்கு 56 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் ஆஃபரும் இந்த பேக் மூலம் பெறலாம். இந்த ஆஃபரை ‘மை வோடஃபோன் ஆப்’ மூலம் மட்டுமே வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று, ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் ரூ.349க்கு டேட்டா ஆஃபரை அறிவித்திருந்தது. அதிலும், ஒரு நாளைக்கு 2 ஜிபி என 28 நாட்களுக்கு 56 ஜிபி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் ஆஃபரை பெற முடியும். மேலும், இலவச எஸ்.எம்.ஸ்.ஆஃபரும் இதில் அடங்கும்.
மேலும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.309 மற்றும் ரூ.399 வரை பல ஆஃபர்களை ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறது. இரண்டிலும் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆனால், ரூ.309 ஆஃபரில் 49 நாட்களுக்கும், ரூ.399 ஆஃபரில் 70 நாட்களுக்கும் வேலிடிட்டி உள்ளது. அதனுடன் இலவச வாய்ஸ் ஆஃபர், எஸ்.எம்.ஸ் உள்ளிட்டவையும் இதனுடன் அடங்கும்.
ஐடியா நிறுவன, ரூ.357க்கு 1 ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் ஆஃபர், தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ். ஆஃபரை வழங்குகிறது.
வாடிக்கையாளர்களை கவர தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஆஃபரை அறிவித்து வருகிறது.