புதிய வரவான ஜியோவுடன் போட்டிப்போட இதர நெட்வொர்க்குகள் பல புதிய திட்டங்களை அறிமுகம் படுத்துகிறது. அந்த வகையில் தற்பொழுது வோடபோன் ரூ 199 திட்டத்தை ப்ரீப்பேய்ட் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால் மேலும் 1ஜிபி 4ஜி/3ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
1000 நிமிடங்கள் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால் முடிந்தவுடன் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 30 பைசா வழங்கப்படுகிறது. மேலும் ஒரு நாளில் 250 நிமிடங்கள் மேல் பேசினால் 30 பைசா வசுலிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் 300 புதிய எண்களுக்கு போன் செய்தால் கூட நிமிடத்திற்கு 30 பைசா ஆகும்.
ஜியோ உடன் ஒப்பிட்டு பார்த்தால் ஜியோ ரூ 149க்கு அதிக டேட்டாவை வழங்குகிறது. ஒரு மாதத்திற்கு 2ஜிபி டேட்டா வழங்குகிறது. அது மட்டும் இல்லாமல் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்கள் அளிக்கிறது. மற்ற சேவைகள் போலவே 2ஜிபி முடிந்தவுடன் டேட்டா வேகம் குறைந்துவிடும்.
மற்றொரு முன்னணி நெட்வொர்க் ஆன ஏர்செல் ரூ 199க்கு அன்லிமிடெட் கால் மற்றும் 28 நாளுக்கு 1ஜிபி டேட்டா அளிக்கிறது.
ஜியோவின் வருகையாலும், அது அளித்த மலிவான சிறந்த திட்டங்களால் மற்ற நெட்வொர்க்குகள் பல அதிரடி திட்டங்களை கொண்டு வருகிறது.