வோடஃபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வோடஃபோன் திட்டம்:
டெலிகாம் மார்கெட்டில் ஜியோவின் வருக்கைக்கு பின்பு வந்த மாற்றங்கள் ஏராளம். ஜியோவின் வருகையால் 2ஜி யூசர்கள் கூட ஒரே நாளில் 4ஜி சேவைக்கு மாறினர். இந்த மாற்றத்தை சற்றும் எதிர்பார்க்காத மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன், பிஎஸ்என்எல் போன்றவை தொடர் சரிவை சந்தித்தனர்.
குறிப்பாக ஏர்செல் போட்டியை சமாளிக்க முடியாமல் கடையை இழுத்து மூடிவிட்டு சென்றது. இப்போது களத்தில் ஏர்டெல்- ஜியோ நிறுவனங்கள் கடுமையாக மோதிக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான ஆஃபர்கள், ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன. இந்த போட்டியில் தற்சமயம் வோடஃபோன் நிறுவனமும் இணைந்துள்ளது.
168 நாட்கள் வேலிடிட்டி :
சமீபகாலமாக புதிய புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வரும் வோடஃபோன் நிறுவனம் தற்போது ரூ.597 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகை 168 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. ஏர்டெல் ஏற்கனவே வழங்கி வரும் ரூ.597 சலுகைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய வோடபோன் சலுகையில், ஏர்டெல் வழங்கும் அதே சலுகைகள் வழங்கப்படுகிறது.
வோடபோனின் இந்த புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி 4ஜி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இந்தியா முழுக்க ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு 112 நாட்கள் வேலி்டிட்டியும், ஃபீச்சர்போன் பயனர்களுக்கு 168 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
இத்துடன் அன்லிமிட்டெட் அழைப்புகளில் தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்களும், வேலிடிட்டி முழுக்க வாய்ஸ் கால் அளவு 100 எண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.