/tamil-ie/media/media_files/uploads/2022/05/vodafone-idea-new-logo-vi-1200.jpg)
பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான வி(வோடபோன் ஐடியா), தனது பயனர்களுக்கு புதிதாக ப்ரீபெய்டு ஆட் ஆன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், அழைப்பு, மெசேஜ் போன்ற வசதிகள் கிடைக்கவில்லை என்றாலும், டேட்டாவுடன் ஓடிடி வசதி கிடைக்கிறது.
Vi Rs 151 prepaid add-on plan
வி நிறுவனம் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் ரூ151 டேட்டா ஆட் ஆன் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மொத்தம் 8GB வரையிலான டேட்டா வழங்கப்பட்டுள்ளது. இதற்கான வேலிடிட்டி குறித்த தகவல் கிடைக்கவில்லை.
மற்ற வி ப்ரீபெய்டு திட்டங்கள்
சிறிது நாள்களுக்கு முன்பு தான், வி நிறுவனம் புதிதாக மூன்று ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகம் செய்தது. அதில் ஒன்று ரூ299 திட்டம். இதில், வரம்பற்ற அழைப்புகளும், தினமும் 100எஸ்எம்எஸ் மற்றும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 28 நாள்கள் ஆகும். முக்கியம்சமாக, இரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை, இலவசமாக வரம்பற்ற டேட்டா உபயோகித்துக்கொள்ளலாம். அதேபோல், திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினசரி கணக்கில் மீதமுள்ள டேட்டாவை, சனி மற்றும் ஞாயிறுகளில் உபயோகித்துகொள்ளலாம்.
மற்ற 479 ரூபாய் திட்டம் 56 நாள்களும், 719ரூ திட்டம் 84 நாள்களும் வேலிடிட்டி கொண்டது. இரண்டு திட்டத்திலும் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 மெசேஜ் மற்றும் 1.5 ஜிபி டேட்டா வசதி உள்ளது. முந்தைய திட்டத்தை போல், இரவு இலவச டேட்டா கிடைத்திடும். கூடுதலாக மாதம் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.