வாக்காளர் அட்டை இல்லையா? சிம்பிள்… ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க!

How to apply Voter ID card online tamil news: வாக்காளர் அடையாள அட்டையை எப்படி ஆன்லைனில் அப்ளை செய்வது என்பது பற்றி இங்கு காணலாம்.

Voter ID card tamil news how to apply Voter ID card online

தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த மாதம் 6 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மற்றும் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய இளம் வாக்காளர்கள், தங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டையை தற்போது ஆன்லைனில் அப்ளை செய்து கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிப்பது எப்படி

தேவையான ஆவணங்கள்

  1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
  2. அடையாளச் சான்று: பிறப்புச் சான்றிதழ் / பாஸ்போர்ட் / ஓட்டுநர் உரிமம் / பான் அட்டை
  3. முகவரி சான்று: ரேஷன் கார்டு / பாஸ்போர்ட் / டிஎல் / பயன்பாட்டு பில்

வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் முறை

முதலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்திற்குச் செல்லவும். அதில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம் 6 ஐத் தேர்வுசெய்யவும். பிறகு தேசிய வாக்காளர் சேவை போர்டலில் (NSVP), புதிய வாக்காளருக்கு பதிவு செய்வதற்கான விருப்பத்தைத் தேர்வுசெய்ய வேண்டும்.

பொருத்தமான மாநில மற்றும் சட்டமன்றத் தொகுதியை சரியாக தேர்வுசெய்து, படிவத்தில் தேவைக்கேற்ப தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும். புகைப்படம், அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று முதலியவற்றை ஸ்கேன் செய்து, பதிவேற்றம் செய்யவும். அனைத்து விவரங்களையும் வழங்கி பின்பு, ‘சமர்ப்பி’ என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது விண்ணப்பத்தை சமர்ப்பித்தவுடன், விண்ணப்பதாரர் தங்கள் வாக்காளர் அடையாள விண்ணப்பம் தயாரா என்பதை கண்காணிக்க அனுமதிக்கும் இணைப்பைக் கொண்ட மின்னஞ்சலைப் பெறுவார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Voter id card tamil news how to apply voter id card online

Next Story
வாக்காளர் அட்டை கையில் இல்லையா? இப்படி டவுன்லோட் செய்து பயன்படுத்துங்க!Voter ID card tamil news how to download Voter ID card online
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com