Voter ID card tamil news: தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் தேத்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நாளன்று வாக்குச் செலுத்த தேவையான முக்கிய ஆவணங்களில், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையும் ஒன்று. இந்த வாக்காளர் அட்டையை பெற, நீங்கள் நீண்ட நாட்களுக்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவை தற்போது டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைகளாக இந்திய தேர்தல் ஆணைத்தால் வழங்கப்பட உள்ளன.
இந்த டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பெற, உங்களுடைய வாக்காளர்கள் அடையாள அட்டையின் (EPIC ) எண் அவசியமான ஒன்று ஆகும். அவற்றை பயன்படுத்தி டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைகளாக ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை, தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சுமார் 21.39 லட்சம் வாக்காளர்களுகளுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 16 முதல் டிசம்பர் 15 வரை நடத்தப்பட்ட சிறப்பு சுருக்கம் திருத்த முகாமில் கலந்து கொண்ட மற்றும் 2021 இல் புதிய வாக்காளர் அட்டைக்கு பதிவு செய்த நபர்களின் மொபைல் எண், அவர்கள் புதியதாக பதிவு செய்ய விண்ணப்பித்த வாக்காளர்கள் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் தங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி, தேசிய வாக்காளர் சேவை போர்டலில் நுழைந்து, (https://www.nvsp.in/) தங்கள் EPIC ஐ ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். மற்றவர்களுக்கு, இந்த வசதி விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
டிஜிட்டல் வாக்காளர்கள் அடையாள அட்டை E-EPIC ஐ எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
முதலில் உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியுடன் https://www.nvsp.in/ என்ற இணைய பக்கத்தில் பதிவு செய்யுங்கள். பின்னர் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை அதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இப்போது தேசிய வாக்காளர் சேவை போர்டலின் உள்ளே நுழைந்து nvsp.in, E-EPIC Download என்பதை கிளிக் செய்ய வேண்டும். EPIC எண் அல்லது குறிப்பு எண்ணை உள்ளிட்டு மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும். திரையில் இப்போது உங்கள் வாக்காளர் அடையாள அட்டை தோன்றும். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil