scorecardresearch

வாக்காளர் அட்டை கையில் இல்லையா? இப்படி டவுன்லோட் செய்து பயன்படுத்துங்க!

how to download Voter ID card online tamil news: பதிவு செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்ய எளிய வழிமுறைகளை இங்கு வழங்கியுள்ளோம்.

Voter ID card tamil news how to download Voter ID card online

Voter ID card tamil news: தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைப்பெற உள்ளது.

இந்த நிலையில், நடக்க உள்ள சட்ட மன்ற தேர்தலில் வாக்கு செலுத்த உள்ளோர்க்கு வாக்காளர் அடையாள அட்டை அவசியம் ஆகும். எனவே உங்கள் வாக்குகளை செலுத்த அவசியமான வாக்காளர் அடையாள அட்டையை, தற்போது ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தவிர 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் மூலம் புதிய புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்கவும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யவும், இங்கு எளிய வழிமுறைகளை வழங்கியுள்ளோம்.

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் பதிவிறக்குவதற்கான படிகள் இங்கே

முதலில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும். அங்கு புதிய வாக்காளராக விண்ணப்பிக்க ‘பதிவு இணைப்பு’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு, அதில் பெயர், வயது, முகவரி, மற்றும் திருமணம் போன்ற தேவையான விவரங்களை நிரப்பவும். மேலும், விண்ணப்பதாரர், சுய விபரங்ககளையும், வாக்காளர் விபரங்களையும் அதில் பதிவிடவும்.

அதன்பின்னர், சேர்க்கை செயல்முறை முடிக்க, உங்களுடைய அடையாளம் ஆதாரம் மற்றும் முகவரி ஆதார ஆவணங்களை அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்போது விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்ப எண்ணை, விண்ணப்பிக்க பதிவு செய்த அலைபேசி எண்ணிலோ அல்லது இ-மெயில் முகவரியிலோ பெறுவார். நீங்கள் பெற்ற விண்ணப்ப எண்ணைக் கொண்டு, உங்கள் விண்ணப்பம் தயாராகி விட்டதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். பின்னர் விண்ணப்பித்த வாக்காளர் அடையாள அட்டை தயரானதும், அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Voter id card tamil news how to download voter id card online

Best of Express