Voter ID card tamil news: வாக்காளர் அடையாள அட்டை என்பது இந்திய அரசால் வழங்கப்படும் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இதை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது போன்ற பிற நோக்கங்களுக்காக இது பொதுவான அடையாளம், முகவரி மற்றும் வயது சான்றாக செயல்படுகிறது. தவிர எதிர் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தேவைப்படும் முக்கிய ஆவணக்கமாகவும் உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர் தேர்தல்களில் பங்கேற்கவும், நாட்டை ஆளக்கூடிய பிரதிநிதிகளைத் தேர்வுசெய்யவும், சட்டங்களை இயற்றவும், நாடு, மாநிலம் அல்லது உள்ளாட்சி அமைப்பை நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்திய குடிமக்களுக்கும் நியாயமான கட்டுப்பாடுகளுடன் வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறது.
வாக்காளர் அடையாள அட்டையில் உங்கள் புகைப்படத்தை எவ்வாறு புதுப்பிப்பது என்பது பற்றி இங்கு காணலாம்
முதலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சேவை அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும். (https://www.nvsp.in/)
இப்போது “வாக்காளர் பட்டியலில் உள்ளீடுகளைத் திருத்துதல்” என்ற விருப்பத்தைத் தேர்வுசெய்ய வேண்டும்.
பின்னர் “படிவம் 8” ஐத் தேர்ந்தெடுத்தால் படிவம் தானாகவே திறக்கக்கும். அதில் உங்கள் மாநிலம், சட்டசபை மற்றும் தொகுதியின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து தகவல்களையும் நிரப்பி, “புகைப்படம்” என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
அதில் உங்கள் பெயர், முகவரி மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவல் போன்றவற்றை உள்ளிடவும்.
இப்போது உங்கள் கணினியிலிருந்து துணை ஆவணங்களை பதிவேற்றவும். அவற்றோடு உங்கள் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை பதிவேற்றவும்.
புகைப்படத்தை பதிவேற்றியதும், உங்கள் மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண் மற்றும் இடத்தின் பெயரையும் சேர்த்து அதில் உள்ளீடு செய்ய வேண்டும். மற்றும் இந்த கோரிக்கையை சமர்ப்பிக்கும் தேதியையும் உள்ளிடவும்.
இப்போது சமர்ப்பி “Submit” என்பதைக் கிளிக் செய்து சமர்ப்பிக்கவும்.
நீங்கள் பதிவு செய்த மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடிக்கு கோரிக்கை சமர்க்கிப்பட்டது என்ற குறுஞ்செய்தி கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil