Voter ID Status Tamil news: தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர்கள் அட்டை மிகவும் அவசியமான ஆவணம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் மூலமாக புதிய வாக்காளர் அட்டை பெறவும், வாக்காளர் அட்டையில் பெயர், முகவரி போன்ற மாற்றங்களை செய்து கொள்ளவும், மற்றும் வாக்கு மையங்கள் குறித்த விபரம் அறியவும் அதன் இணையப் பக்கத்தில் வசதிகளை செய்துள்ளது.
முன்னதாக நீங்கள் ஆன்லைன் மூலமாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து இருந்தால், அதன் நிலை குறித்து அறிவது ஈஸியாகும். நீங்கள் விண்ணப்பித்த விண்ணப்பம் பெறப்பட்ட பிறகு, அதை பூத் நிலை அதிகாரி (பி.எல்.ஓ) சரிபார்ப்பார். அது முடிந்ததும், தகுதிகளின்படி உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது நிராகரிக்கப்படும். மற்றும் உங்கள் விண்ணப்பத்தின் நிலையைச் சரிபார்க்க, உங்களுக்கு வழங்கப்பட்ட குறிப்பு எண் மிக முக்கியமான ஒன்று ஆகும்.
வாக்காளர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தின் நிலையை எவ்வாறு சரிபார்ப்பது என்பது குறித்த படிகளை இங்கு வழங்கியுளோம்.
வாக்காளர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தின் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்.
முதலில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு செல்லவும் (https://www.nvsp.in).
அதில் விண்ணப்ப நிலை “Application Status” என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது உங்களது குறிப்பு ஐடியை உள்ளிட்டு செய்து, ட்ராக் நிலை 'Track status' என்பதை கிளிக் செய்யவும்.
நீங்கள் உங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்த விபரங்களை திரையில் காணலாம்.
ஒருவேளை உங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்த விபரம் கிடைக்கவில்லை என்றால், இந்த லிங்க்கை பதிவு செய்து கொள்ளவும். சில நாட்கள் கழித்து மீண்டும் முயற்சி செய்து பார்க்கலாம். தவிர இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள 1950 என்ற இலவச எண்ணை அழைத்து உங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம். அதே போல வாக்காளர் அட்டை பதிவு செய்த அலைபேசி எண்ணுக்கு வரும் எஸ்.எம்.எஸ்- களை அவ்வப்போது செக் செய்து கொள்ளுங்கள். உங்கள் வாக்காளர் அட்டை தயாரானதும் அந்த எண்ணுக்கு கண்டிப்பாக எஸ்.எம்.எஸ் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil.