Voter ID Card tamil news: தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வாக்காளர் அட்டையை அவசியம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே உங்கள் மொபைலில் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்யவதற்கான எளிய படிகளை இங்கு காணலாம்.
மொபைலில் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்யவதற்கான படிகள்
முதலில் தேசிய வாக்காளர் போர்ட்டல் (NVSP) என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும். அல்லது வாக்காளர் ஹெல்ப்லைன் மொபைல் செயலி எனும் செயலியை பயன்படுத்தி e-EPIC என்ற விருப்பத்தை தெரிவு செய்யவும்.
இப்போது அதில் இ-மெயில் மற்றும் கடவுச் சொல் கேட்க்கும். நீங்கள் முன்பு இந்த இணைய பக்கத்தில் பதிவு செய்திருந்தால் அந்த ஐடி-யை கொடுக்கவும். இல்லையென்றால் இந்த இணையப்பக்கத்தில் புதிய ஐடி-யை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அதன்பின் அந்த புதிய ஐடி-யை உள்ளீடு செய்து உள்ளே நுழைய வேண்டும்.
இப்போது Download e-EPIC என்ற விருப்பத்தை தேர்வு செய்து, அதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் எண்ணை உள்ளீடு செய்யவும். பின்னர் Download என்ற விருப்பத்தை தெரிவு செய்து. பிடிஎஃப் பார்மேட்டில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இந்த சேவை புதியதாக வாக்களர் அட்டை பதிவு செய்தவர்களுக்கு மட்டும் உள்ளது எனவும், முன்பு பதிவு செய்தவர்களுக்கு விரைவில் அப்டேட் செய்யப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணைய இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil