கடந்த ஏப்ரல் 7 அல்லது 8ம் தேதி தோன்றிய ''சூப்பர் பிங்க் மூன்'' நிகழ்வை நாம் கண்டுகளித்தோம். அதே போன்று வரும் வியாழக்கிழமை "சூப்பர் ஃப்ளவர் மூன்" என்று எனும் வானியல் நிகழ்வை நாம் கண்டுகளிக்க இருக்கிறோம். இது இந்த ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி சூப்பர் மூன் நிகழ்வாகும்.
Advertisment
சோளம் நடவு நிலவு, பால் நிலவு, வெசக் மூன் திருவிழா போன்ற போன்ற பல பெயர்களால் இந்த நிகழ்வு அழைக்கப்படுகிறது.
சூப்பர் மூன் என்றால் என்ன?
சுருங்க சொன்னால் : ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றிவரும் நிலவு வரும் 7 ஆம் பூமிக்கு மிக அருகில் வர இருக்கிறது. அதனால், அன்று நிலவு மிகப் பெரியதாக காட்சியளிக்கும். அதையே, நாம் சூப்பர் மூன் என்று அழைக்கிறோம்.
Advertisment
Advertisements
சற்று விரிவாக:
பூமியில் இருந்து நிலவு சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் அதன் சராசரி தூரம் 384403 கி.மீ. ஆகும். அது ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றி வருவதால் பூமிக்கு குறைந்த தூரத்திலும் பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்கும் சென்று சுற்றி வருகிறது.
நன்றி; NASA
அதன் சுழற்சிப் பாதையில் பூமியில் இருந்து வெகு தூரத்திற்கும் செல்லும்போது அபோஜி என்று அழைக்கப்படுகிறது. அப்போது, பூமியில் இருந்து நிலவு 405500 கி.மீ. தூரத்தில் இருக்கும்.
அது தனது சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது பெரிஜி என்றழைக்கப்படுகிறது. அப்போது அதன் தூரம்
363300 கி.மீ. ஆக சுருங்குகிறது. இந்த பெரிஜி நிலைதான் வரும் மே- 7 ஆம் தேதி வியாழக்கிழமை ஏற்படுகிறது.
அன்றைக்கு நிலவு பூமிக்கு மிக அருகில் வருகிறது. இதனால் நிலவு மிகப் பெரியதாக தெரியும். இதுவே சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது.
சூப்பர் ஃப்ளவர் மூன் நிகழ்வை எப்போது பார்ப்பது?
மே 7, வியாழக்கிழமை, மாலை 4.15 மணிக்கு சூப்பர் ஃப்ளவர் மூன் உச்ச வெளிச்சத்தை எட்டும் என்று நாசா தெரிவித்துள்ளது. அப்போது, பூமியிலிருந்து சந்திரன் 361,184 கி.மீ தூரத்தில் இருக்கும். இந்த நிகழ்வு ஏற்படும் போது, உலகில் மலர்கள் பூத்து குலுங்குவதால் இதற்கு சூப்பர் ஃப்ளவர் மூன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அடுத்த, சூப்பர்மூன் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil