Advertisment

அட்டகாசம்; டால்பி விஷனில் டி20 உலகக் கோப்பை: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் புதிய முயற்சி

டால்பி விஷனை ஆதரிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 4K-எனெபிள்ட் ஸ்மார்ட் டிவிகள் மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய முடியும்.

author-image
WebDesk
New Update
Disney.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இப்போது, ​​கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டை சிறந்த தரத்தில் அனுபவிக்க முடியும். கடந்த வெள்ளிக்கிழமை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், உலகிலேயே கிரிக்கெட்டுக்காக இந்தியாவில் டால்பி விஷனில் லைவ் விளையாட்டுகளை ஸ்ட்ரீம் செய்யும் முதல் ஸ்ட்ரீமர் ஆனது.

Advertisment

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024-க்கான அனைத்துப் போட்டிகளும், சூப்பர் 8, அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் என அனைத்தும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் டால்பி விஷனில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று ஸ்ட்ரீமிங் சேவை அறிவித்துள்ளது.

எனினும் இந்த வசதி டால்பி விஷன் வசதி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டால்பி விஷன் வசதி மூலம் வீடியோ ஸ்ட்ரீமிங்கை துல்லியமான நிறம் மற்றவவைகளை பெறமுடியும். colours, sharp contrast, and rich details ஆகிவற்றை டால்பி விஷன் மூலம் பெறலாம். 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/disney-hotstar-dolby-vision-live-cricket-9378223/

டால்பி விஷனை ஆதரிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 4K-எனெபிள்ட் ஸ்மார்ட் டிவிகள் மட்டுமே  ஸ்ட்ரீம் செய்ய முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. டால்பி லேபரட்டரீஸ் உருவாக்கிய டால்பி விஷன், ஹை டைனமிக் ரேஞ்ச் (HDR) வீடியோவை வழங்குகிறது. 

முதன்முதலில் 2014-ல் அறிமுகப்படுத்தப்பட்டது, டால்பி விஷன் அதிகபட்ச தெளிவுத்திறன் 8K, 12-பிட் colour depth மற்றும் அதிகபட்ச உச்சபட்ச பிரகாசம் ( brightness) 10,000 நிட்களை அனுமதிக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Hotstar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment