”எல்லா தவறுக்கும் நான் தான் காரணம் மன்னித்துவிடுங்கள்”:நாடாளுமன்றத்தில் கதறிய மார்க்!

இந்தியா, பாகிஸ்தான், ஐங்கேரி, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு இந்த வருடம் மிக முக்கியமான வருடம் .

ஃபேஸ்புக் மூலம் அமெரிக்க மக்களின் தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேரில்  ஆஜராகி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பகிரங்க மன்னிப்புக் கேட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, கேம்பிட்ஜ் அனாலிடிக்கா என்ற அரசியல் நிறுவனத்திற்கு அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்கள் முறைகேடாக தரப்பட்டுள்ளது.  இந்த தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மூலம்  பகிரப்பட்டுள்ளது  என்ற மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

இந்த தகவலை பிரிட்டனின் சேனல் 4 செய்தியாக வெளியிட்டது. இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு,  இந்தியா வரை பரவியது. இந்த சர்ச்சை  ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து  ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பேஸ்புக் நிர்வாகம், ஃபேஸ்புக் நிறுவனர், மார்க் ஜூக்கர்பெர்க்கை விசாரணைக்கு அழைத்தது.சுமார் 87 மில்லியன் யூசர்களின் தகவல்களை அந்நிறுவனம், நேர்மையற்ற முறையில்  தந்தாக தகவல் கசிந்தது.  இதுக் குறித்து,tதனது முகநூல் பக்கத்தின் மூலம் பதில் அளித்த மார்க்,  அனைவரிடமும் மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார். அத்துடன், நம்பிக்கை மீறல் நடைபெற்றுள்ளது எனவும் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வாஷிங்டனில் இருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபை முன் மார்க் இன்று ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

மார்க் கூறியாதாவது, ”இந்தியா, பாகிஸ்தான், ஐங்கேரி, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு இந்த வருடம் மிக முக்கியமான வருடம் என்றும், இந்த நாடுகளில் நடைபெறும் தேர்தல்கள் தங்கள் தரத்தை இழக்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் நாங்கள் மேற்கொள்வோம் என்றார்.

மேலும் பேசிய அவர் “ கேம்பிட்ஜ் அனாலிடிக்கா நிர்வாகம் எங்களுக்கு நல்ல பாடத்தை கற்று தந்து விட்டது. இதனால் யூசர்கள் அல்லாமல் அனைவரும்  பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  ஃபேஸ்புக்கை நான்தான் துவங்கினேன்; அதை நடத்தி வருவதும் நானே. எனவே, ஃபேஸ்புக் நிறுவனத்தில் நடக்கும் தவறுகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்.

ங்களின் முதல்வேலையே உலக நாடுகளின் தேர்தல்களுடைய  நேர்மையை காக்க வேண்டும் என்பதே. அந்தவகையில், இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் நடக்கவிருக்கும் தேர்தல்களின் நேர்மையை காப்போம் என உறுதியளிக்கிறோம்.  இந்தியா, பாகிஸ்தான், ஐங்கேரி, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு இந்த வருடம் மிக முக்கியமான வருடம் .

இந்த நாடுகளில் நடைபெறும் தேர்தல்கள் தங்கள் தரத்தை இழக்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் நாங்கள் மேற்கொள்வோம்.2018ஆம் ஆண்டில் இந்த விவகாரத்தில் அதிகம் கவனம் செலுத்த இருக்கிறோம்” என்று மார்க் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த மார்க், வழக்கத்திற்கு மாறாக கோர்ட் ஷூட் அணிந்து வந்திருந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்கள் மார்க்கின்  முகமூடி அணிந்து ‘டெலீட் பேஸ்புக்‘ என்ற வாசகம் கொண்ட டி-சர்ட் அணிந்து கொண்டும் அவருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

×Close
×Close