மழைக் காலத்தில் வெடித்து சிதறும் ஹீட்டர்கள்.. விபத்துக்கு 3 முக்கிய காரணங்கள், தீர்வுகள்!

மழைக்காலத்தில் குளியல் நீரை சூடாக்கப் பயன்படுத்தப்படும் மின்சார ஹீட்டர்கள் முறையாகப் பயன்படுத்தப்படாவிட்டால் வெடிப்பு போன்ற விபத்துகளை ஏற்படுத்தக் கூடும். முன்னெச்சரிக்கையுடன் இருப்பது விபத்து அபாயத்தைக் குறைப்பதுடன், மின் கட்டணத்தையும் சேமிக்க உதவும்.

மழைக்காலத்தில் குளியல் நீரை சூடாக்கப் பயன்படுத்தப்படும் மின்சார ஹீட்டர்கள் முறையாகப் பயன்படுத்தப்படாவிட்டால் வெடிப்பு போன்ற விபத்துகளை ஏற்படுத்தக் கூடும். முன்னெச்சரிக்கையுடன் இருப்பது விபத்து அபாயத்தைக் குறைப்பதுடன், மின் கட்டணத்தையும் சேமிக்க உதவும்.

author-image
Meenakshi Sundaram S
New Update
Water Heater Safety

மழைக்காலத்தில் வெடித்து சிதறும் ஹீட்டர்கள்.. 3 முக்கிய காரணங்கள், தீர்வுகள்

மழைக்காலத்தில் வீடுகளில் குளிக்கும் நீரைச் சூடாக்குவதற்குப் பெரும்பாலானோர் மின்சார ஹீட்டர்களை பயன்படுத்துகின்றனர். கடுங்குளிர் நிலவும் வேளையில், ஹீட்டர் இல்லாமல் குளிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றே கூறலாம். இருப்பினும், இந்த ஹீட்டர்கள் நீண்ட நேரம் பயன்படுத்தப்படாமல் இருந்தாலோ அல்லது முறையாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தாலோ கடுமையான விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisment

வெடிப்பு அபாயத்தைத் தடுப்பது எப்படி?

தண்ணீர் அதிகளவு சூடாகும் போது ஹீட்டர் வெடிக்கக்கூடும். இந்த ஆபத்து, குறிப்பாக பழைய மாடல் ஹீட்டர்களில் அதிகமாக உள்ளது. ஏனெனில், பழைய ஹீட்டர்களில் தண்ணீர் அதிக வெப்பநிலையை அடைந்தால் தானாகவே இயந்திரத்தை அணைக்கும் ஆட்டோ-கட் (Auto-Cut) அல்லது ஸ்மார்ட் சென்சார்கள் போன்ற அம்சங்கள் இருப்பதில்லை. எனவே, உங்கள் வீட்டில் ஸ்மார்ட் சென்சார் வசதி இல்லாத பழைய ஹீட்டர் இருந்தால், அது பயன்பாட்டில் இல்லாதபோது கட்டாயம் அணைக்கப்பட வேண்டும். மேலும், வெடிப்பு அபாயத்தைத் தவிர்க்க, பழைய ஹீட்டரை ஆட்டோ-கட் வசதியுடன் கூடிய புதிய, ஸ்மார்ட் சென்சார் ஹீட்டருடன் மாற்றுவது சிறந்தது.

மின்சார சேமிப்பு மற்றும் பாதுகாப்பு:

ஆட்டோ-கட் அம்சம் கொண்ட புதிய ஹீட்டர்கள் தண்ணீரின் வெப்பநிலையைக் கண்காணித்து, குறிப்பிட்ட வெப்பநிலையை அடைந்தவுடன் தானாகவே அணைந்து விடுவதால், அவை மின்சாரச் செலவையும் கணிசமாகக் குறைக்கின்றன. புதிய ஹீட்டரை நிறுவும்போது, தண்ணீரின் வெப்பநிலையைக் கண்காணிக்கும் தெர்மோஸ்டாட்டைப் பயன்படுத்துவது அவசியம். இது நீர் அதிகமாகச் சூடாவதைத் தடுத்து, விபத்துகளைத் தவிர்க்கும்.

ஹீட்டருக்கு எப்போதும் 16-ஆம்ப் பவர் சாக்கெட்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறைந்த பவர் சாக்கெட்டைப் பயன்படுத்துவது ஷார்ட் சர்க்யூட்டை ஏற்படுத்தி, தீ விபத்துக்கு வழிவகுக்கும். புதிய ஹீட்டரை வாங்கிய பிறகு, அதை திறமையான தொழில்நுட்ப வல்லுநரை கொண்டு நிறுவுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். புதிய ஹீட்டரை வாங்குவதற்கு முன், மின்சாரத்தைச் சேமிக்கும் அதன் நட்சத்திர மதிப்பீடு (Star Rating) மற்றும் ISI குறியீடு ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும். முன்னெச்சரிக்கையுடன் ஹீட்டரைப் பயன்படுத்துவது வெடிப்பு அபாயத்தை குறைப்பதுடன், உங்க மின்சாரக் கட்டணத்தையும் குறைக்க உதவும்.

Advertisment
Advertisements
Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: