/indian-express-tamil/media/media_files/2025/06/13/UTbbilykRNXiF0LNr0JU.jpg)
மழை, வியர்வை, தண்ணீர்.. ஸ்மார்ட்போனை காப்பாற்றுவது எது? வாட்டர் ப்ரூப் Vs வாட்டர் ரெசிஸ்டன்ட்
புதிய ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் (அ) ஏதேனும் ஒரு எலக்ட்ரானிக் டிவைஸ் வாங்கும்போது, அதன் அம்சங்களில் "வாட்டர் ப்ரூஃப்" (Waterproof) அல்லது "வாட்டர் ரெசிஸ்டன்ட்" (Water Resistant) என்ற வார்த்தைகளைப் பார்த்திருப்போம். ஆனால், இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று என்றாவது யோசித்ததுண்டா? உண்மையில், "வாட்டர் ரெசிஸ்டன்ட்" டிவைஸ் தண்ணீரில் விழுந்தால் என்ன ஆகும்? "வாட்டர் ப்ரூஃப்" என்றால் உண்மையில் அது தண்ணீருக்குள் பாதுகாப்பாக இருக்குமா? இந்தக் குழப்பங்களுக்கு இங்கே தெளிவான பதில் காணலாம்.
இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு!
நிறைய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வாட்டர் ப்ரூஃப் அல்லது வாட்டர் ரெசிஸ்டன்ட் என்று கூறினாலும், அவை இரண்டும் முற்றிலும் வெவ்வேறு விஷயங்கள்தான்.
வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistant): இந்த வகை டிவைஸ் ஓரளவுக்குத் தண்ணீர் தாக்குதலைத் தாங்கும். அதாவது, லேசான மழைத் துளிகள் அல்லது வியர்வையிலிருந்து தப்பிக்க உதவும். ஆனால், தண்ணீருக்குள் போட்டால் நிச்சயம் சேதமடைய வாய்ப்புள்ளது.
வாட்டர் ப்ரூஃப் (Waterproof): இந்த வகை சாதனங்களை தண்ணீருக்குள்ளும் வைத்திருக்கலாம். அவை தண்ணீரில் சேதமடையாது.
ஐ.பி ரேட்டிங்கை பார்த்து வாங்குங்கள்!
ஒரு தயாரிப்பு எப்படி வாட்டர் ரெசிஸ்டன்ட் அல்லது வாட்டர் ப்ரூஃப் ஆனது என்ற கேள்விக்கு ஐபி ரேட்டிங்தான் பதில். IP (Ingress Protection) என்பது ஒரு டிவைஸ் எவ்வளவு தூரம் தூசி மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாப்பாக இருக்கிறது என்பதை மதிப்பிடும் முறை. உதாரணமாக, ஒரு ஸ்மார்ட்போனில் ஐபி67 ரேட்டிங் இருந்தால், அது குறிப்பிட்ட நேரம் வரை தண்ணீரில் இருக்கலாம். ஐபிX8 ரேட்டிங் இருந்தால், அந்த டிவைஸ் அதிக ஆழத்தில் கூடப் பாதுகாப்பாக இருக்கும்.
நீங்கள் ஒரு டிவைஸ் வாங்கும்போது, உங்கள் தேவை என்ன என்பதைப் பொறுத்துத் தேர்வு செய்யுங்கள். தினசரி மழை அல்லது வியர்வையில் இருந்து பாதுகாக்க விரும்பினால், வாட்டர் ரெசிஸ்டன்ட் டிவைஸ் போதுமானது. நீங்கள் நீச்சல் செல்லும்போது அல்லது அதிக தண்ணீர் இருக்கும் இடத்தில் வேலை செய்தால், வாட்டர் ப்ரூஃப் டிவைஸ் வாங்குவது சிறந்தது.
எந்தவொரு டிவைஸும் 100% வாட்டர் ப்ரூஃப் ஆக இருக்காது. நீண்ட நேரம் தண்ணீருக்குள் வைத்திருந்தால் அல்லது அடிக்கடி தண்ணீரில் மூழ்கடித்தால் சேதமடைய வாய்ப்பு உண்டு. எனவே, இனிமேல் புதிய எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கும்போது அதன் ஐபி ரேட்டிங்கை சரிபார்த்து வாங்குங்கள். வாட்டர் ரெசிஸ்டன்ட்-வாட்டர் ப்ரூஃப் ஆகியவற்றுக்கு இடையேயான உண்மையான வித்தியாசத்தை புரிந்து கொண்டு, உங்களுக்கான சரியான டிவைஸைத் தேர்ந்தெடுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.