பாஸ்வேர்ட் (Password) என்பது நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வரும் மிக முக்கிய தொழில்நுட்பம். உங்கள் அக்கவுண்ட், செயலி, வெப்சைட் என எதுவாக இருக்கலாம் தனிப்பட்ட பயன்பாடு அல்லது அலுவலக பயன்பாடு என எதுவாக இருந்தாலும் அதன் முக்கியத்துவத்தை கருதி நீங்கள் பாஸ்வேர்ட் உள்ளிட்டு பாதுகாப்பாக வைத்திருப்பீர்கள்.
கூகுள் முதல் பல நிறுவனங்கள் எப்போதும் உறுதியான பாஸ்வேர்ட் பயன்படுத்த அறிவுறுத்தும். அதாவது நம்பர், எழுத்துகள் (Capital, Small letters, Special characters) உள்ளிட்டவைகளுடன் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தும். எனினும் பலர் (Week Password - "Password", 1234567") எனப் பயன்படுத்துவதால் எளிமையாக ஹேக்கிங் பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள். மற்றும் நம்மில் பலர் பாஸ்வேர்ட் மறந்துவிடுகிறோம். இதற்கு தீர்வாக பாஸ்கீஸ் (Passkeys ) தொழில்நுட்பம் அறிமுகமாக உள்ளது. எதிர்கால உலகை ஆக்கிரமிக்க உள்ளது.
பாஸ்கீஸ் என்றால் என்ன?
பாஸ்கீஸ் என்பது ஒரு வகையான பாதுகாப்பு அம்சமாகும், இது பயனர்கள் பாஸ்வேர்ட் பயன்படுத்தாமல் தங்கள் ஆன்லைன் அக்கவுண்ட்களை பயன்படுத்த அனுமதிக்கிறது. அவை WebAuthentication அல்லது WebAuthn தரநிலையில் கட்டமைக்கப்பட்டுள்ளன, இது உங்கள் கணக்குகளை சிறப்பாகப் பாதுகாக்க உதவும். பாஸ்வேர்ட் டைப் செய்வதற்குப் பதிலாக பயனர்கள் தங்கள் இ-மெயில் அல்லது மொபைல் போனுக்கு அனுப்பபடும் பாஸ்கீஸ்- 1 டைம் கோடாக பயன்படுத்தலாம். இதன் மூலம் பயனர்கள் ஹேக்கர்களிடமிருந்து தங்கள் கணக்குகளைப் பாதுகாக்கலாம்.
https://indianexpress.com/article/technology/tech-news-technology/what-are-passkeys-8961974/
பாஸ்கீஸ் என்பது கூடுதல் பாதுகாப்பு layer-ஆக உள்ளது. பயோமெட்ரிக், பின் நம்பர் உடன் இணைந்து பயன்படுத்தலாம். இது ஆன்லைன் சேவைகளில் மிகவும் பிரபலமாகி வருகின்றன. பயனர்கள் லாக்கின் செய்ய வசதியான மற்றும் பாதுகாப்பான வழியை வழங்குகிறது.
பாஸ்கீஸ் எவ்வாறு வேலை செய்யும்? ஏன் இது Safe?
பாஸ்கீஸ் public-key cryptography தொழில்நுட்பம் மூலம் 2 வழிமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது. public key மற்றும் private key இணைந்து இதில் பயன்படுத்தப்படுகிறது. public key- வெப் சர்வரில் சேமிக்கப்படும். private key- உங்கள் போன், லேப்டாப் (உங்கள் சாதனத்தில்) சேமிக்கப்படும்.
நீங்கள் வெப்செட் அல்லது செயலியில் லாக்கின் செய்யும் போது, சர்வர் உங்கள் சாதனத்திற்கு ஒரு தகவலை அனுப்புகிறது. அது private key-க்கு தகவல் அனுப்பி பதிலை கொடுக்கிறது. பின்னர் சர்வர் public key- உடனான தகவலை வெரிஃபை செய்கிறது. private key பற்றிய தகவலைப் பெறாமல் இதை வெரிஃபை செய்கிறது. இதன் மூலம் சர்வரில் தகவல் ஏதும் பதிவாகாமல் உங்கள் பாஸ்கீஸ் பாதுகாப்பாக இருக்கும்.
பாஸ்கீஸ் எவ்வாறு உருவாக்குவது மற்றும் பயன்படுத்துவது?
பாஸ்கீஸ் உருவாக்க, மைக்ரோசாப்ட், கூகுள் அல்லது ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டும். அடுத்து பாஸ்கீஸ் ஆதரிக்கும் ஆப்ஸ் அல்லது வெப்சைட் சைன்-இன் செய்ய வேண்டும். பாஸ்கீஸ் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும். Touch ID, Face ID or a QR code ஆகியவற்றை பாஸ்கீஸாக பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“