Advertisment

எலான் மஸ்க் ட்விட்டரில் என்ன செய்து வருகிறார்? முன்பு டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸில் செய்தது என்ன?

எலான் மஸ்க் பிரபல சமூகவலைதளமான ட்விட்டரை வாங்கியது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ட்விட்டரில் பல மாற்றங்களை கொண்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
எலான் மஸ்க் ட்விட்டரில் என்ன செய்து வருகிறார்? முன்பு டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸில் செய்தது என்ன?

உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் பிரபல சமூகவலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார். மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதிகாரிகள், ஊழியர்கள் பணி நீக்கம், ‘ப்ளூ டிக்’ வசதிக்கு சந்தா எனப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ட்விட்டரில் பல மாற்றங்களை கொண்டு வருகிறார். இது உலக முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில், எலான் மஸ்க் முந்தைய காலங்களில் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் செய்ததை ட்விட்டர் நிறுவனத்திலும் செய்வதாக அமெரிக்க ஊடங்கள் கூறுகின்றன.

எலான் மஸ்க் அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். ஊழியர்களையும் நிர்வாகிகளையும் விருப்பப்படி பணிநீக்கம் செய்தார். மேலும் தனது நிறுவனம் திவாலாகிவிட்டதாக அவர் புலம்பினார். இது 2018-ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தில் நடந்தது.

அப்போது மஸ்க்கின் மின்சார வாகனம் மாடல் 3-ஐ உருவாக்க போராடி வந்தனர்.

"இது மிகவும் வேதனையானது" என்று அவர் அந்த நேரத்தில் நியூயார்க் டைம்ஸிடம் கூறினார். மேலும் 3, 4 நாட்கள் தொழிற்சாலையிலேயே இருந்தோம் என்று கூறியிருந்தார். கோடீஸ்வரரின் டெஸ்லாவின் அனுபவம், கடந்த மாதம் 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிய ட்விட்டரில் அவர் உருவாக்கிய நெருக்கடிக்கான ஒரு வரைபடமாக மாறியுள்ளது.

பல ஆண்டுகளாக, மஸ்க் தனது நிறுவனங்களை நிர்வகிப்பதற்கான ஒரு பிளேபுக்கை உருவாக்கியுள்ளார். டெஸ்லா மற்றும் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸில் பயன்படுத்தினார். கடுமையான பணிசுமைகளை கொடுத்தாக கூறப்படுகிறது. இலக்கை எட்ட தான் உள்பட ஊழியர்களையும் குடும்பத்தினர், நண்பர்களிடமிருந்து விலகி வைத்துள்ளார். இலக்கை அடைவதே பணியாக கொண்டிருந்தார்.

ட்விட்டரில், மஸ்க் ஒரு சில வாரங்களில் சமூக ஊடக நிறுவனத்தை உயர்த்த அதே தந்திரங்களைப் பயன்படுத்தினார். கடந்த மாத இறுதியில் இருந்து, 51 வயதான மஸ்க் ட்விட்டரின் 7,500 ஊழியர்களில் 50 சதவீதத்தை பணிநீக்கம் செய்து 1,200 அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். திங்களன்று, அவர் மற்றொரு சுற்று பணிநீக்கத்தைத் தொடங்கி உள்ளார் என 2 பேர் கூறினர்.

சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் அலுவலகங்களில் தான் தூங்குவதாக ட்வீட் செய்துள்ளார். மேலும் அவர் பணி சார்ந்த மொழியைப் பயன்படுத்தினார், ட்விட்டரின் ஊழியர்களிடம் கூறுகையில், நிறுவனத்தை மேம்படுத்த முடியவில்லை என்றால் நிறுவனம் திவாலாகிவிடும் என்று கூறினார். "ட்விட்டர் 2.0" இல் பணிபுரிய விரும்புபவர்கள் "ஹார்ட் கோர்" பணிக்கு எழுத்துப்பூர்வமாக அர்ப்பணிக்க வேண்டும் என்று கூறினார்

2014 முதல் 2016 வரை டெஸ்லாவில் பேட்டரி பொருட்கள் விநியோகத்தை மேற்பார்வையிடும்

மூத்த பொறியியல் மேலாளராக பணிபுரிந்த டேவிட் டீக் கூறுகையில், மஸ்க் அவர் சூழ்நிலைகளில் தெளிவாக இருக்கிறார். அனைவரையும் தீவிரப்படுத்துகிறார் என்றார்.

மஸ்க் ட்விட்டரை அணுகுவதற்கும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸில் அவர் செய்ததற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் தெளிவாகத் தெரிகிறது என்று சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பேராசிரியரான டாமி மேட்சன் கூறினார். ஆனால், எரிவாயு மூலம் இயங்கும் கார்களில் இருந்து மக்களை நகர்த்துவது அல்லது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது போன்ற தேடுதல்களைக் கொண்ட தொழிலாளர்களைப் போலவே, சமூக ஊடக நிறுவனத்தில் ஊழியர்களை ஊக்குவிக்கும் வழியை அவர் கண்டுபிடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

"டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸில், அணுகுமுறை எப்போதும் அதிக ஆபத்து, அதிக வெகுமதி" என்று மேட்சன் கூறினார். "ட்விட்டர் அதிக ஆபத்தில் உள்ளது, ஆனால் கேள்வி என்னவென்றால்: அதிலிருந்து வரும் வெகுமதி என்ன?"

ஞாயிற்றுக்கிழமை, மஸ்க் ட்விட்டரின் சேல்ஸ் பிரிவு ஊழியர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். பின்னர் திங்கட்கிழமை அந்த துறையில் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தார்.

கடந்த வார இறுதியில், மஸ்க் அந்த துறையை சேர்ந்த மூத்த அதிகாரியான ராபின் வீலரை பணிநீக்கம் செய்தார். மேலும் பணிநீக்கங்கள் வரக்கூடும் என்று ப்ளூம்பெர்க் முன்னதாக அறிவித்தது.

ட்விட்டரிலிருந்து வெளியேறிய சில பொறியாளர்களை திரும்பி வருமாறு ட்விட்டர் கூறுகிறது என தகவல் தெரிவிக்கின்றன. திங்களன்று ஊழியர்களுடனான சந்திப்பில், கலந்துகொண்ட ஒருவரின் கூற்றுப்படி, நிறுவனத்தில் மேலும் பணிநீக்க திட்டங்கள் ஏதும் இல்லை என மஸ்க் கூறியதாக கூறினார்.

மஸ்க் தலைமையிலான நிறுவனங்களில், நிறுவனங்கள் திவால்நிலையின் விளிம்பில் இருப்பதாகக் கூறும் முறை அடிக்கடி வருகிறது. டிசம்பர் 2008 இல் டெஸ்லாவில், நிதி நெருக்கடியின் ஆழத்தில், மஸ்க், டெய்ம்லரிடமிருந்து $50 மில்லியன் முதலீட்டை மூடினார்.

ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா இரண்டுமே தங்கள் ஆரம்ப நாட்களில் "$0 மதிப்புடையதாக" இருப்பதற்கு 90%-க்கும் அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக ஒருமுறை மஸ்க் குறிப்பிட்டார்.

2017-ம் ஆண்டில், ஸ்பேஸ்எக்ஸ் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ராக்கெட் ஏவுதல்களைச் செய்ய வேண்டும் அல்லது திவால்நிலையை எதிர்கொள்ள வேண்டும் என்று மஸ்க் கூறினார், என்று முன்னாள் ஸ்பேஸ்எக்ஸ் நிர்வாகி ஒருவர் நினைவு கூர்ந்தார். வாழ்க்கையை "பல்கிரகங்கள்" ஆக்கும் இலக்கால் இயக்கப்படும் ஒரு நிறுவனத்தில், திவால் அச்சுறுத்தல் ஒரு ஊக்கமளிக்கும் காரணியாக இருந்தது என்றார்.

ஸ்பேஸ் எக்ஸ் பல ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி, அவற்றைப் பாதுகாப்பாக மீண்டும் பூமியில் தரையிறக்கியது. ஆனால் மஸ்க் இதிலிருந்து விலகினார்.

கடந்த ஆண்டு "கடுமையான உலகளாவிய மந்தநிலை" மூலதனத்தை உலர்த்தினால், ராக்கெட் தயாரிப்பாளரின் திவால்நிலை "சாத்தியமற்றது அல்ல" என்று ட்வீட் செய்தார்.

மஸ்க் ட்விட்டரில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது அவரது வழக்கமான செயல் 'Typical Elon' என டீக் கூறினார்.

மஸ்க்கின் மேலாண்மை நுட்பங்கள் "நல்ல தொடக்க மற்றும் வளர்ச்சி உத்தி, ஆனால் ஒரு நிலையான நிறுவனத்தை உருவாக்க இது நல்லதல்ல" என்றார்.

ஒரு நிறுவனத்திற்கான மஸ்கின் முழு அர்ப்பணிப்பு பெரும்பாலும் ஊக்கமளிக்கிறது, ஆனால் நச்சுத்தன்மையை மாற்ற வேண்டும் என 3 முன்னாள் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் மேலாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் மஸ்க்கிற்கு ட்விட்டரை ரீமேக் செய்வது ஒரு பகுதி நேர வேலை மட்டுமே. அவர் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். அவர்அதை தொடர்ந்து வழிநடத்துவதாக நீதிமன்றத்தில் கூறினார். மேலும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட்டுகளை வடிவமைப்பதில் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment