இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 2018-ல் நீல நிற ஆதார் அட்டையை (பால் ஆதார்) அறிமுகப்படுத்தியது. இது குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
நீல நிற ஆதார் அட்டை
நீல நிற ஆதார் அட்டை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் வழக்கமாக ஆதாரில் எடுக்கப்படும் பையோமெட்ரிக் டேட்டா பெறப்படாது. அதாவது கண் விழி ஸ்கேன், Finger print scan போன்ற பையோமெட்ரிக் டேட்டா இருக்காது. டிமோகிராபிக் தகவல்கள், குழந்தையின் போட்டோ மட்டும் இடம்பெறும்.
நீல நிற ஆதார் (baal aadhaar) அட்டைக்கு விண்ணப்பது எப்படி?
1. UIDAI - uidai.gov.in என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2. Enrollment படிவத்தில் விவரங்களை நிரப்ப வேண்டும்.
3. ஆதார் அட்டை விண்ணப்பிக்க அப்பாயின்மென்ட் வாங்கவும்.
4. உங்களுக்கு அருகில் உள்ள Enrollment மையத்திற்கு செல்லவும்.
5. குழந்தையின் பெற்றோர் ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வரவும்.
6. அவ்வளவு தான் விவரங்களை ஆதார் மையத்தில் கொடுத்து விண்ணப்பிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“