தீபாவளியின் முதல் நாளான தந்தேராஸ் சமயத்தில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் Physical gold ஆக தங்கம் வாங்குவது மேக்கிங் கட்டணங்கள் போன்ற கூடுதல் செலவு ஏற்படும்.
அதே நேரம், டிஜிட்டல் தங்கமாக வாங்குவது மேக்கிங் கட்டணங்கள் போன்ற கூடுதல் செலவு எதுவும் ஏற்படாது. எளிதாக அதை ஆன்லைனில் வாங்கலாம். Physical gold வாங்கும் போது, அது 22 காரட் அல்லது 91.6 சதவிகிதம் சுத்தமான தங்கமாக இருக்கும். டிஜிட்டல் தங்கம் 24 காரட் அல்லது 100 சதவிகிதம் தூய்மையானதாக இருக்கும்.
இந்தியாவில் டிஜிட்டல் தங்கம் வாங்க சிறந்த தளங்கள்
Google Pay, Paytm மற்றும் PhonePe போன்ற அனைத்து முக்கிய டிஜிட்டல் பேமெண்ட் தளங்களும் வாங்கலாம். வேறு எந்த ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யாமல், புதிய கணக்கு ஏதும் தொடங்காமல் நேரடியாக கூகுள் பே, போன் பே போன்ற ஆப்களில் டிஜிட்டல் தங்கம் வாங்கலாம்.
கூகுள் பே-ல் டிஜிட்டல் தங்கம் வாங்குவது எப்படி?
கூகுள் பே சென்று, கோல்ட் லாக்கர் என்ற ஆப்ஷனை தேடவும். அதன் பின் அங்கு விலை கொடுக்கப்பட்டிருக்கும். இன்றைய விலை கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து தொகை குறிப்பிட்டு பணம் செலுத்தலாம். அவ்வளவு தான்.
ஆங்கிலத்தில் படிக்க: What is digital gold and how to buy it from Google Pay, Paytm or PhonePe?
PhonePe -ல் டிஜிட்டல் தங்கம் வாங்குவது எப்படி
PhonePe-ல் டிஜிட்டல் தங்கம் வாங்குவது ரொம்ப ஈஸி. செயலி ஓபன் செய்து wealth என்ற ஆப்ஷனை தேடி கோல்ட் ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதன் பின் உங்களுக்கு வேண்டிய தங்கத்தை பணம் செலுத்தி பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“