சர்வதேச விண்வெளி காங்கிரஸில் உள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA), அதன் மூன்லைட் லூனார் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் நேவிகேஷன் சர்வீசஸ் (LCNS) திட்டத்தை செவ்வாய், அக்டோபர் 15 அன்று தொடங்கியது.
மூன்லைட் திட்டம் என்றால் என்ன?
இந்தத் திட்டமானது துல்லியமான தன்னாட்சி தரையிறக்கங்கள் (autonomous landings), அதிவேக தகவல் தொடர்பு மற்றும் மேற்பரப்பு இயக்கம் ஆகியவற்றை அனுமதிக்கும் சுமார் ஐந்து சந்திர செயற்கைக்கோள்களின் தொகுப்பைக் கொண்டிருக்கும்.
இந்த செயற்கைக்கோள்கள் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே 2,50,000 மைல்கள் அல்லது 4,00,000 கிலோமீட்டர் தொலைவுக்கு தரவு பரிமாற்றத்தை செயல்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்த பணியைப் பற்றி பேசுகையில், ESA-ன் இயக்குனர் ஜெனரல் ஜோசப் ஆஷ்பேசர், வணிக ரீதியிலான நிலவு பயணங்களுக்கு இந்த திட்டம் உதவியாக இருக்கும். தற்போதைய மற்றும் எதிர்கால சந்திர பயணங்களுக்கு ஆதரவளிப்பதில் நிறுவனம் ஒரு முக்கியமான படியை எடுத்து வருவதாக கூறினார்.
திட்டத்தின் ஒரு பகுதியாக, 2026 ஆம் ஆண்டில் சர்ரே சேட்டிலைட் டெக்னாலஜி லிமிடெட் உருவாக்கியுள்ள லூனார் பாத்ஃபைண்டர் என்ற தகவல் தொடர்பு ரிலே செயற்கைக்கோளை ஏவுவது முதல் படியாகும்.
திட்டத்தின் ஆரம்ப சேவைகள் 2028 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கும் என்றும், இந்த அமைப்பு 2030 ஆம் ஆண்டளவில் முழுமையாக செயல்படும் என்றும் கூறினார்.
திட்டத்தின் முதன்மை நோக்கம் நிலவின் தென் துருவ பகுதிக்கு தொடர்பு வழங்குவதாகும். காரணம் இங்கு நீர் பனி இருப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக கூறப்படுவதால் உலக நாடுகள் இங்கு கவனம் செலுத்துகிறது என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“