இன்று ’ஓநாய் சந்திர கிரகணம்’: வெறும் கண்களால் பார்க்கலாமா?

Lunar Eclipse 2020 Facts: 2020 ஆம் ஆண்டில் மொத்தம் ஆறு கிரகணங்கள் நடக்கும்  என்று கணிக்கப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு சந்திர கிரகணங்களுக்கும், இரண்டு சூரிய கிரகணங்களுக்கும் அடங்கும்.

What is Lunar Eclipse, Lunara Eclipse Facts : சில நாட்களுக்கு முன்பு அரிய நிகழ்வாக ‘நெருப்பு வளைய’ சூரிய கிரகணத்தைப் பார்த்தோம்.

தற்போது புதிய வருடத்தில் இருக்கிறோம். இந்த வருடத்தின் முதல் கிரகணம் இன்று நிகழவிருக்கிறது. எந்த கிரகணம் என யோசிக்க வேண்டாம். இன்று நடக்கவிருப்பது ‘சந்திர கிரகணம்’. இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம் என்பது பூமி, சூரியன் ஆகிய இரண்டிற்கும் இடையில் சந்திரன் வருவதால், பூமியில் இருக்கும் நாம்  சூரியனை பார்க்க முடியாத நிகழ்வாகும்.  (சரியன், சந்திரன், பூமி அனைத்தும் ஒரு நேர் கோட்டில் சீரமைக்கப்படும்போது)

சந்திர கிரகணம் என்பது, சூரிய ஒளி நிலவை அடையவிடமால், இரண்டிற்கும் இடையில் இருக்கும்  பூமி தடுக்கும் நிகழ்வாகும். (சரியன், சந்திரன், பூமி அனைத்தும் ஒரு நேர் கோட்டில் சீரமைக்கப்படும்போது)

சந்திர கிரகணத்தை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம் , இதனால் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது என்று அறிவியாலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முழு சந்திரகிரகண நிகழ்வின் போது பூமியின் நிழல் முழுமையாக சந்திரனை ஆக்கிரமித்துக் கொள்ளும். அப்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் தெரிகிறது.

நாளை சந்திர கிரகணம் இந்தியா, ஐரோப்பியா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் தெளிவாக தெரியும்.

முழு சந்திர கிரகணம் கேள்விப்பட்டிருப்போம்!! அது என்ன ஓநாய் சந்திர கிரகணம்?

பொதுவாக, புவியின் நிழலை

  1. கருநிழல் (Umbra)
  2. புறநிழல் (Penumbra)                                                                                 என்று இருவேறு பகுதிகளாகப் பிரிக்கலாம்

நாளை புறநிழல் (Penumbra) சந்திர கிரகணம் நடக்கவிருக்கிறது.

கருநிழல்: பூமி நிழலின் கருமையான மற்றும் உள்பகுதியும் ஆகும். இந்தப் பகுதியில் சூரிய ஒளியானது முழுமையாகத் தடுக்கப்படுகிறது. கரு நிழல் பகுதியில் உள்ள ஒரு நோக்குநர் முழுமையான கிரகணத்தைப் பார்க்கிறார்.

புறநிழல் : இது நிழலின் வெளிப்பகுதியும் ஆகும். இந்தப் பகுதியில் ஒளியானது முழுமையாகத் தடுக்கப்படுதில்லை

இந்தியாவில்,இந்த புறநிழல் (Penumbra) சந்திர கிரகணம்
Timeanddate.com என்ற வலைத்தளத்தின் படி, இன்று (ஜன10) இரவு 10:37 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 4 மணி 5 நிமிடங்கள் வரை கிரகணம் நீடிக்கும். (அதாவது, ஜனவரி 11 ம் தேதி அதிகாலை 2:42 மணிக்கு முடிவடையும்)

அதிகபட்ச கிரகணம் ஜனவரி 11 அதிகாலை 12:42 மணிக்கு நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 சந்திர கிரகணங்கள் :  2020 ஆம் ஆண்டில் மொத்தம் ஆறு கிரகணங்கள் நடக்கும்  என்று கணிக்கப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு சந்திர கிரகணங்களுக்கும், இரண்டு சூரிய கிரகணங்களுக்கும் அடங்கும்.

ஜனவரி 10ம் தேதி சந்திர கிரகணம் 2020 ஆம் ஆண்டின் முதல் வான நிகழ்வாகும். இரண்டாவது  சந்திர கிரகணம் ஜூன்(5 மற்றும் 6) மாதத்திலும், மூன்றாவது  ஜூலை (4 மற்றும் 5) மாதத்திலும், நான்கவாது சந்திர கிரகணம் நவம்பர் ( 29-30)மாதத்திலும்  நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் அனைத்து சந்திர கிரகணங்களும் புறநிழல் (Penumbra) சந்திர கிரகணங்களாகவே இருக்கும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: What is lunar eclipse lunara eclipse facts date and timing of india lunar eclipse

Next Story
16 எம்.பி செல்ஃபி கேமராவுடன், 5,000 எம்ஏஎச் பேட்டரி… அசரவைக்கும் நுபியா N2 ஸ்மார்ட்போன்!nubia-n2-
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com