New Update
/indian-express-tamil/media/media_files/wqECx5puXCVETCSnCDGO.jpg)
உண்மை கண்டறிவதில் மெட்டா டேட்டா மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. பொதுவாக 'பிற தரவு பற்றிய தரவு' (data about other data) என விவரிக்கப்படும் இது, டெக்ஸ்ட் அல்லது படத்தின் ஒரிஜின், சூழல் மற்றும் வரலாறு போன்ற அத்தியாவசிய தகவல்களை வழங்குகிறது. பல்வேறு மெட்டா டேட்டாகள் உள்ளன. டெக்ஸ்ட் மெட்டா டேட்டா, ஆடியோ, வீடியோ, போட்டோ மெட்டா டேட்டா, சமூக வலைதள மெட்டா டேட்டா போன்ற பல்வேறு மெட்டா டேட்டாகள் உள்ளன.
போட்டோ மெட்டா டேட்டா
போட்டோ மெட்டா டேட்டா என்பது ஒரு குறிப்பிட்ட இமேஜ் ஃபைல் பற்றிய தகவல் மற்றும் குறிப்பிட்ட விவரங்களை வழங்குவதாகும். இந்தத் தகவல் பெரும்பாலும் போட்டோ எடுக்கப்பட்ட தேதி, ஃபைல் பெயர், உள்ளடக்கம், போன் அல்லது கேமரா பயன்படுத்தி எடுக்கப்பட்ட விவரம் மற்றும் சில சமயங்களில் லோக்கேஷன் ஆகியவற்றை கொண்டிருப்பதாகும். இது EXIF (Exchangeable Image File) தரவு என அறியப்படுகிறது.
போட்டோ மெட்டா டேட்டா டெலிட் அல்லது எடிட் செய்ய முடியுமா?
ஆம் செய்ய முடியும். போட்டோவின் மெட்டா டேட்டா டெலிட் அல்லது எடிட் செய்வது எளிதானது. சமூக வலை தளப் பக்கதில் மெட்டா டேட்டா இல்லாமல் ஒரு போட்டோ போஸ்ட் செய்ய விரும்பினால் போட்டோவை ஸ்கிரீன் ஷாட் செய்து பதிவிடலாம்.
ஆனால், புகைப்படத்தின் மெட்டா டேட்டாவைச் சரிபார்ப்பது அவசியம். புகைப்படத்தின் காட்சி தகவல், துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் சூழல் ஆகியவை உறுதிப்படுத்த முடியும். மேலும் டிஜிட்டல் உலகில் டிஜிட்டல் மேனிபுலேஷன் மற்றும் தவறான தகவல் ஆகியவற்றை சரிபார்ப்பதற்கான செயல்பாட்டில் இது ஒரு முக்கியமான படியாகும்.
எடுத்துக் காட்டாக: கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் ஐபோன் 13-ல் எடுக்கப்பட்டது.
இந்தப் படத்தின் மெட்டா டேட்டா
ஆன்லைனில் EXIF டேட்டா அல்லது மெட்டா டேட்டா வியூவர்ஸ் பல உள்ளன. இதில் நாங்கள் 'jimpl.com' என்ற டேட்டா பயன்படுத்தி உள்ளோம். Jimpl-ல் படத்தை அப்டோடு செய்த போது படத்தின் மெட்டா டேட்டா, லோக்கேஷன் ஆகியவைகள் கிடைத்தன.
ஆன்லைனில் இன்னும் பல மெட்டா டேட்டா வியூவர்ஸ் உள்ளன. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ‘exif viewer online’ அல்லது ‘metadata viewer online’ என டைப் செய்ய வேண்டும், இது சில இலவச மெட்டா டேட்டா வியூவர்ஸ் வழங்கும்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/artificial-intelligence/metadata-fact-finding-role-explained-9041789/
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.