/tamil-ie/media/media_files/uploads/2019/03/satellite.jpg)
Mission Shakti Anti Satellite Missile
What is Mission Shakti Anti Satellite Missile : இன்று நாட்டுக்கு ஒரு முக்கியமான செய்தியை நான் உங்களுக்கு 11:45 மணிக்கு கூற இருக்கின்றேன் என்று லைவில் வந்தார் பிரதமர் மோடி. செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் மிஷன் சக்தி என்ற ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து விட்டதாக அவர் கூறியிருந்தார்.
What is Mission Shakti Anti Satellite Missile
ஆனால் மிஷன் சக்தி என்றால் என்ன ? செயற்கை கோள்களை தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணைகளை எந்த நாடுகள் எல்லாம் வைத்திருக்கிறது என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
ஆண்டி சேட்டிலைட் வெப்பன்ஸ் என்று அழைக்கப்படும் Anti-satellite weapons (ASAT) என்ற ஏவுகணை ஒன்றை இந்தியாவில் தயாரித்து உள்ளனர்.
மிஷன் சக்தி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை நேரடியாக தன்னுடைய இலக்கை வெறும் மூன்று நிமிடங்களில் தாக்கி அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வகை ஏவுகணைகளை வைத்திருக்கும் நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற பெருமையை தற்போது பெற்றுள்ளது இந்தியா.
அமெரிக்கா தான் முதன்முதலில் (1958-ல்) இந்த ஏவுகணையை தயாரித்தது. அதனைத் தொடர்ந்து சோவியத் யூனியன் 1964ல் இந்த சோதனை முயற்சியில் வெற்றியடைந்தது. 2007ம்m ஆண்டு சீனாவும் இம்முயற்சியில் வெற்றி கண்டது. 2015ம் ஆண்டில் ரஷ்யா பி.எல்.-19 நியூடோ ஏவுகணையை சோதனையில் இறக்கியது.
இந்தியாவின் செயற்கைக் கோள்களை பாதுகாப்பதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிற நாடுகளை பயமுறுத்தும் எண்ணத்தில் இந்த சோதனையை செய்யவில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் மோடி.
மேலும் படிக்க : “மிஷன் சக்தி” மூலம் புதிய சாதனை படைத்த இந்தியா – மோடி பெருமிதம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.